Asianet News TamilAsianet News Tamil

ஸ்ரீமதி மரணம் பலாத்காரமும் இல்லை, கொலையும் இல்லை கூறிய நீதிமன்றம்.. தாய் எடுத்த அதிரடி முடிவு?

கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி ஜிப்மர் மருத்துவக்குழுவின் ஆய்வறிக்கையின் படி பாலியல் வன்கொடுமையோ, கொலையோ செய்யப்படவில்லை என்பது உறுதியாகி உள்ளது என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்தது. 

srimathi death case...Parents decide to appeal in Supreme Court
Author
First Published Aug 30, 2022, 1:18 PM IST

கள்ளக்குறிச்சி வழக்கில் பள்ளி நிர்வாகிகள் 5 பேருக்கு ஜாமின் வழங்கிய உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து ஸ்ரீமதியின் பெற்றோர் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அடுத்த கனியாமூர் தனியார் பள்ளியில் மாணவி ஸ்ரீமததி கடந்த ஜூலை 13-ம் தேதி பள்ளி வளாகத்தில் மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்தார். பள்ளி நிர்வாகத்தினர், மாணவி ஸ்ரீமதி 3-வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டதாகவும், பெற்றோர் தரப்பில் மகள் கொலை செய்யப்பட்டததாகவும் கூறினர். இந்த சம்பவம் தொடர்பாக  பள்ளி தாளாளர் ரவிக்குமார், செயலாளர் சாந்தி, பள்ளி முதல்வர் சிவசங்கரன் ,வேதியியல் ஆசிரியை ஹரி பிரியா, கணித ஆசிரியை கீர்த்திகா ஆகியோர் கைது செய்யப்பட்டனர். 

இதையும் படிங்க;- ஸ்ரீமதி உடலில் கைரேகைகள்! அதிக காயங்கள் இருந்ததாக கூறியும் 5 பேருக்கு ஜாமீன் கிடைத்தது எப்படி? பரபரப்பு தகவல்

srimathi death case...Parents decide to appeal in Supreme Court

இதனையடுத்து, 5 பேரும் ஜாமீன் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை விழுப்புரம் மாவட்ட நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. பின்னர், சென்னை ஜாமீன் கேட்டு சென்னை 5 பேரும் மனுதாக்கல் செய்தனர். இந்த மனுவை விசாரித்த நீதிபதி சதீஷ்குமார் பள்ளித் தாளாளர் உள்ளிட்ட 5 பேருக்கும் நிபந்தனை ஜாமீன் வழங்கி கடந்த 26-ம் தேதி உத்தரவிட்டது.

srimathi death case...Parents decide to appeal in Supreme Court

மேலும், கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி ஜிப்மர் மருத்துவக்குழுவின் ஆய்வறிக்கையின் படி பாலியல் வன்கொடுமையோ, கொலையோ செய்யப்படவில்லை என்பது உறுதியாகி உள்ளது என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்தது. இந்நிலையில், மாணவி மரண வழக்கில் ஸ்ரீமதியின் பெற்றோர் உச்சநீதிமன்றத்ததில் மேல் முறையீடு செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும், பள்ளி நிர்வாகிகள் 5 பேருக்கு ஜாமின் வழங்கிய உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தை நாட உள்ளனர். 

இதையும் படிங்க;-  கள்ளகுறிச்சி மாணவி ஸ்ரீமதி மரணம் கொலையா ? தற்கொலையா ? நீதிமன்றம் பரபரப்பு தகவல்.!!

Follow Us:
Download App:
  • android
  • ios