Asianet News TamilAsianet News Tamil

புதுச்சேரியில் இருந்து கடத்தி வரப்பட்ட 300 மது பாட்டில்கள்; மாறுவேடத்தில் சென்று கைது செய்த காவல்துறை

புதுச்சேரியில் இருந்து கடலூருக்கு மதுபாட்டில்கள் கடத்தி வரப்படுவதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் காவல் துறையினர் மாறு வேடத்தில் சென்று கடத்தலில் ஈடுபட்டவர்களை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

smuggling liquor bottles seized by tn police in cuddalore district
Author
First Published May 17, 2023, 4:52 PM IST

விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தில் கள்ளச்சாராயம் குடித்து 14 பேர் உயிரிழந்துள்ளனர். அதேபோல செங்கல்பட்டிலும் போலி மது குடித்து பலர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் தமிழகம் முழுவதும் சாராயம் மற்றும் மது பாட்டில் கடத்தலை தடுக்க காவல்துறை தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் கடலூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக காவல் துறையினர் தீவிர வாகன தணிக்கை மேற்கொண்டும், ரோந்து பணியில் ஈடுபட்டும் சாராயம் கடத்தல், மதுபானங்கள் விற்பனை செய்பவர்களை கைது செய்து வருகின்றனர். 

இதன் ஒரு பகுதியாக புதுச்சேரி மாநிலத்திலிருந்து கடலூருக்கு மது பாட்டில்கள் கடத்தப்படுவதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் கடலூர் ஆல்பேட்டை சோதனை சாவடியில் காவல் துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். காவல் துறையினர் சிலர் சீருடை அணியாமல் கைலி மற்றும் டி-ஷர்ட் அணிந்து கொண்டு புதுச்சேரி மாநிலத்தில் இருந்து கடலூர் நோக்கி இருசக்கர வாகனத்தில் வந்தவரை காவல் துறையினர் வழிமறித்தனர். 

கரூரில் 120 அடி செல்போன் டவரில் ஏறி போராட்டம் நடத்திய பெண்ணால் 4 மணி நேரம் பரபரப்பு

பின்னர் இருசக்கர வாகனத்தில் இருந்த 3 சாக்கு மூட்டைகளை சோதனை செய்ததில், அதில் 300 மதுபாட்டில்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து இரு சக்கர வாகனத்தில் வந்த நபரை பிடித்து காவல் துறையினர் விசாரணை நடத்தியதில், அவர் புதுச்சேரி மாநிலம் அரியாங்குப்பத்தைச் சேர்ந்த சரவணன் (வயது 43) என்பதும், புதுச்சேரி மாநில மதுபாட்டில்கள் மற்றும் சாராய பாக்கெட்டுகளை கடலூருக்கு கடத்தி வந்து விற்பனை செய்ய முயன்றதும் தெரிய வந்தது. 

வடிவேலு பட காமெடியை குறிப்பிட்டு; தமிழக காவல், போக்குவரத்து துறையை பங்கமாக கலாய்த்த பாஜக

இதையடுத்து காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து சரவணனை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்த 300 மது பாட்டில்கள் மற்றும் 50 சாராய பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது.

Follow Us:
Download App:
  • android
  • ios