Asianet News TamilAsianet News Tamil

பள்ளி வகுப்பறையில் மாணவன், மாணவி தற்கொலை முயற்சி.. என்ன காரணம் தெரியுமா? வெளியான அதிர்ச்சி தகவல்.!

கடலூர் அரசு மேல்நிலைப்பள்ளி வகுப்பறையில் மாணவ- மாணவிகள் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

school classroom student  suicide attempted .. Do you know the reason?
Author
Cuddalore, First Published Aug 6, 2022, 12:08 PM IST

கடலூர் அரசு மேல்நிலைப்பள்ளி வகுப்பறையில் மாணவ- மாணவிகள் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

கடலூர் மாவட்டம் கிழக்கு ராமாபுரம் பகுதியில் அரசு மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் 1500க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். வழக்கம் போல மாணவ மாணவிகள் பள்ளிக்கு வந்துள்ளனர். அப்போது, 12ம் வகுப்பு படிக்கும் மாணவர் ஒருவர் வகுப்பறையில் விஷம் குடித்துள்ளார். அடுத்த சில நிமிடங்களில் அதே வகுப்பை சேர்ந்த மாணவியும் விஷத்தை எடுத்து குடித்துள்ளார். 

இதையும் படிங்க;- சொகுசு காரை வாங்கி சர்ச்சையில் சிக்கிய நேரு! விலை இத்தனை கோடியா? இந்த காரை யாரெல்லாம் வச்சிருக்காங்க தெரியுமா?

school classroom student  suicide attempted .. Do you know the reason?

இதை கண்டு அதிர்ச்சியடைந்த சக மாணவர்கள் இது தொடர்பாக ஆசிரியர் மற்றும் தலைமை ஆசிரியருக்கு தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து, அவர்களை உடனடியாக மீட்டு  கடலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இச்சம்பவம் தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் இருவரிடம் விசாரணை நடத்தினர். 

school classroom student  suicide attempted .. Do you know the reason?

அதில், பல்வேறு அதிர்ச்சி தகவல் வெளியானது. விஷம் குடித்த மாணவனும் அந்த மாணவியும் கடந்த சில மாதங்களாகக் காதலித்து வந்தது தெரிய வந்தது. அந்த மாணவி தனக்கு தோல் நோய் இருப்பதாகவும் இதனால் தற்கொலை செய்து கொள்ளப்போவதாகவும் மாணவனிடம் தெரிவித்துள்ளார். இதைக் கேட்டு மனமுடைந்த அந்த மாணவன், காதலி உயிரிழக்கும் முன்பு, தான் உயிரிழந்துவிட வேண்டும் என பள்ளிக்கு விஷத்தை எடுத்து குடித்தது தெரியவந்தது. 

இதையும் படிங்க;-  சித்ரா மரணத்தில் இரு முன்னாள் அமைச்சர்களுக்கு தொடர்பு? நீதிமன்றத்தில் ஹேம்நாத் அதிர்ச்சி தகவல்.!

Follow Us:
Download App:
  • android
  • ios