நாட்டிற்காக என்ன செய்தோம் என ஒவ்வொரு குடிமகனும் நமக்கு நாமே கேள்வி கேட்க வேண்டும் - ஆளுநர் ரவி பேச்சு
நாட்டிற்காக நாம் என்ன செய்தோம் என்பதை ஒவ்வொரு குடிமகனும் மனதில் வைத்துக்கொண்டு பணியாற்றினால் நாட்டின் வளர்ச்சிக்கு பேருதிவியாக இருக்கும் என ஆளுநர் ஆர்.என்.ரவி கருத்து தெரிவித்துள்ளார்.
சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் ஜி-20 புதுடில்லி தலைமை பிரகடனத்தின் சார்பில் உலக ஒழுங்கை வடிவமைப்பதில் இந்திய கல்வித்துறையின் பங்கு என்ற தலைப்பில் ஒரு நாள் தேசிய கருத்தரங்கு நடைபெற்றது. பல்கலைக்கழக சாஸ்திரி அரங்கத்தில் கருத்தரங்கின் துவக்க விழா நடந்தது. இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி பங்கேற்று கருத்தரங்கை துவக்கி வைத்து பேசினார். அப்போது அவர் கருத்தரங்கில் பேசியதாவது, அண்ணாமலை பல்கலைக்கழகமானது இந்திய சுதந்திரப் போராட்டத்தில் முக்கிய பங்கு வகித்துள்ளது.
இந்தியாவின் முக்கியமான விழுமியங்களை பொதுமக்களுக்கு நல்ல காரியங்களை செய்வதற்கு அரசாங்கத்தை எதிர்பார்த்து இல்லாமல் பொதுமக்கள் தாமாகவே அந்த நல்ல காரியங்களை செய்ய வேண்டும் என்பது போன்ற நல்ல கொள்கைகளை பல்கலைக்கழகம் இப்பகுதி மக்களிடையே வளர்த்து உள்ளது. இரண்டாவது உலகப் போருக்கு முன் அமெரிக்கா மற்றும் அதனை சுற்றியுள்ள நாடுகளில் உள்ள ஆதிக்கம் அதிகமாக இருந்தது. இரண்டாம் உலகப்போருக்கு பின் இந்த நிலை மாறி ஐரோப்பிய நாடுகளும், சோவியத் யூனியனும் உலக நடைமுறையை மாற்றி அமைத்துள்ளனர்.
சிதம்பரம் நடராஜர் ஆலய ஆருத்ரா திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்
சுதந்திரம் அடைந்த பின் இந்தியா பல்வேறு துறைகளிலும் வேகமாக வளர்ந்து வருகிறது. வேளாண்மைதுறை, தொழில்துறை மற்றும் தொலைத்தொடர்பு துறையில் வேகமாக வளர்ந்து வருகிறது. உலகத்திலேயே இரண்டாவது ஜனத்தொகை அதிகம் கொண்ட நாட்டில் உணவு உற்பத்தியில் நாம் தன்னிறைவு அடைந்துள்ளது பெருமையாக இருக்கிறது. இதற்காக விவசாயிகளுக்கு நாம் நன்றி கடன் செலுத்துகிறோம்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
கடந்த 2020ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2022 ஆம் ஆண்டில் இந்திய நாட்டில் 31 சதவீதம் விண்வெளி ஆராய்ச்சி தொடர்பான தொழில்கள் வளர்ச்சி பெற்று உள்ளன. ஜி-20 உச்சி மாநாட்டில் முக்கியமாக உலகத் தலைவர்கள் எடுத்த முடிவு, பொருளாதார வளர்ச்சியை விட மனித ஆற்றல், குறிப்பாக மனிதனை நோக்கிய வளர்ச்சியே முக்கியமானது என தீர்மானித்தனர். மனித இன மையப்படுத்திய வளர்ச்சி என்பது எல்லோருக்கும், எல்லாமும் எல்லா வளமும் கிடைக்க வேண்டும். எல்லோரும் முன்னேற வேண்டும். எல்லோரும் பொருளாதார ரீதியாகவும், சமூக ரீதியாகவும் முன்னேற வேண்டும் என்பதை அடிப்படையாகக் கொண்ட கோட்பாடாகும்.
அனைவரின் ஆதரவு, வளர்ச்சி, முயற்சி மூலமாக ஒன்றிணைந்த வளர்ச்சியை நாம் பெற முடியும். அமெரிக்க பொருளாதாரம் முதலாளித்துவத்தை அடிப்படையாகக் கொண்டது. சோவியத் மாதிரி பொருளாதாரம் என்பது சோசலிசத்தை அடிப்படையாகக் கொண்டது. இந்தியாவைப் பொறுத்தவரை இந்த இரண்டிற்கும் நடுவாக நல்ல விழுமியங்களை கொண்ட தனிமனித முயற்சியை அடிப்படையாகக் கொண்ட கட்டமைப்பாகும்.
சுதந்திரத்திற்கு பிறகு நாம் அனைவரும் நமக்குள்ளாகவே கேட்கும் கேள்வி என்னவென்றால் நாம் இந்த தேசத்திற்கு என்ன செய்ய வேண்டும் என்பதாகும். இதற்கான சரியான பதிலை தீர்மானித்தால் நாட்டின் வளர்ச்சிக்கு பேரூதவியாக இருக்கும். இதை நாம் மனதில் வைத்துக் கொள்ள வேண்டும். அறிஞர் பெருமக்கள் நன்றாக சிந்தித்து தங்களது பயணத்தை தொடர்ந்து நடத்த கேட்டுக்கொள்கிறேன் என பேசினார்.