கடலூரில் இருந்து கிளாம்பாக்கம் நோக்கி சென்று கொண்டிருந்த அரசு பேருந்து மதுராந்தகம் அருகில் விபத்துக்குள்ளானது.

Cuddalore-Kilambakkam bus accident: Complete information நாளுக்கு நாள் பேருந்துகளின் விபத்து அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக உயிர் சேதமும் அதிகரிக்கிறது. கடந்த சில தினங்களுக்கு முன்பு திருத்தனி அருகில் டிப்பர் லாரியானது அரசு பேருந்து மீது விபத்துக்குள்ளானது. இதில், 5 பேர் உயிரிழந்த நிலையில், கிட்டத்தட்ட 30 பேர் படுகாயமடைந்தனர். இந்த நிலையில் தான் இன்று கடலூரிலிருந்து சென்னை கிளாம்பாக்கம் நோக்கி வந்து கொண்டிருந்த அரசு பேருந்து ஒன்று விபத்துக்குள்ளாகியிருக்கிறது. கடலூரிலிருந்து கிளம்பிய அரசு பேருந்து திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் மதுராந்தகம் அருகில் வந்த போது விபத்து ஏற்பட்டுள்ளது.

முன்னே சென்ற அரசு பேருந்தை முந்த சென்ற போது டிரைவரது கட்டுப்பாட்டை இழந்தது. இதையடுத்து சென்டர் மீடியனில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் கிட்டத்தட்ட 10 பேர் படுகாயமடைந்த நிலையில் அருகிலுள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். விபத்து ஏற்படுத்திய பேருந்து ஓட்டுநர் தப்பி ஓடியுள்ளார். போலீசார் அவரை தேடி வருகின்றனர்.