கடலூரிலும் நிலக்கரி சுரங்க திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் - அன்புமணி கோரிக்கை

காவிரி டெல்டா மாவட்ட சுரங்கங்களைப் போல கடலூர் மாவட்டத்தின் 3 நிலக்கரி சுரங்கத் திட்டங்களையும் ரத்து செய்ய வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.

Coal mining project should be cancelled in Cuddalore too - Anbumani demand

காவிரி டெல்டா மாவட்டங்களில் நிலக்கரி சுரங்கங்கள் அமைக்கும் திட்டத்தை தமிழக அரசு ரத்து செய்துள்ள நிலையில், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தனது ட்விட்டர் பதிவில், “தமிழ்நாட்டு மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு  சேத்தியாத்தோப்பு, மைக்கேல்பட்டி, வடசேரி ஆகில நிலக்கரித் திட்டங்களை ஏலப்பட்டியலில் இருந்து நீக்க அறிவுறுத்தியிருப்பதாக மத்திய நிலக்கரித்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி கூறியிருக்கிறார். அவ்வாறு அவை நீக்கப்பட்டால் மகிழ்ச்சி!

என்.எல்.சி நிலக்கரி சுரங்கங்களுக்கு எதிராக 40 ஆண்டுகளுக்கு மேலாக போராடி வருகிறோம். கடந்த ஓராண்டில் மட்டும் கருத்துக் கேட்புக் கூட்டம், என்.எல்.சிக்கு பூட்டுப் போடும் போராட்டம், கடலூர் மாவட்டம் முழுவதும் ஒரு நாள் கடையடைப்புப் போராட்டம், கிராமசபைக் கூட்டங்களில் தீர்மானங்கள்,  பல்வேறு அமைப்புகளுடன் கலந்தாய்வுக் கூட்டம் உள்பட 20க்கும் மேற்பட்ட போராட்டங்களை  நடத்தி விழிப்பை ஏற்படுத்தியது பா.ம.க தான்.  இத்திட்டங்கள் கைவிடப்பட்டால் அது பா.ம.கவின் வெற்றியே!

கைதிகளின் பற்களை உடைத்த அதிகாரி மீது கொலை வழக்கு பதிய வேண்டும் - முன்னாள் அமைச்சர் கோரிக்கை

கைவிடப்படும் 3 திட்டங்களை விட  என்.எல்.சி மூன்றாம் சுரங்கம், வீராணம் நிலக்கரித் திட்டம், பாளையம்கோட்டை நிலக்கரித் திட்டம் ஆகியவை மிக மோசமான பாதிப்பை ஏற்படுத்தக்கூடியவை. 70 ஆயிரம் ஏக்கர் பரப்பளவிலான இத்திட்டங்களின் பெரும் பகுதி காவிரி பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் தான் வருகிறது!

மூன்று நிலக்கரித் திட்டங்கள் எதற்காக கைவிடப்பட்டனவோ, அந்த காரணங்கள் அனைத்தும் இந்தத் திட்டங்களுக்கும் பொருந்தும்.  தமிழ்நாட்டு மக்கள் நலனை மதிக்கும் மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி, அதே உணர்வுடன் என்.எல்.சி மூன்றாம் சுரங்கம், வீராணம், பாளையம்கோட்டை நிலக்கரித் திட்டத்தையும் கைவிட வேண்டும்!

சொகுசு பேருந்தும், லாரியும் நேருக்கு நேர் மோதி பயங்கர விபத்து; 2 பேர் பலி

தமிழ்நாட்டிற்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய 3 திட்டங்களையும் கைவிட வேண்டும் என்று மத்திய அரசை தமிழக அரசு வலியுறுத்த வேண்டும். என்.எல்.சி மூன்றாம் சுரங்கம் உள்ளிட்ட திட்டங்களுக்காக ஒரு கைப்பிடி மண்ணைக் கூட கையகப்படுத்தித் தர மாட்டோம் என்று சட்டப்பேரவையில் முதலமைச்சர் அறிவிக்க வேண்டும்” என்று கோரிக்கை விடுத்துள்ளார்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios