கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே சரக்கு வாகனத்தை வாடகைக்கு எடுத்துச் செல்வது போல் எடுத்துச் சென்று ஓட்டுநரை கொலை செய்துவிட்டு தப்பி ஓடிய மர்ம நபர்களை காவல் துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.

கோவை மாவட்டம் சுந்தராபுரம் பகுதியைச் சேர்ந்தவர் பிரபாகரன் (வயது 32). சொந்தமாக சரக்கு வாகனம் ஒன்றை வைத்து தனது குடும்பதின் பொருளாதார தேவையை பார்த்து வந்தார். இந்நிலையில், இவரது வண்டியை அடையாளம் தெரியாத இருவர் வாடகைக்கு வண்டி வேண்டும் என கூறி அவரை அழைத்துச் சென்றுள்ளனர்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

கஞ்சா புகைத்து மட்டையாவது எப்படி? என வீடியோ வெளியிட்ட இளைஞர்கள் - கொத்தாக அள்ளிசென்ற போலீஸ்

அப்போது வடசித்தூர் செட்டிபாளையம் சாலையில் வாகனம் செல்லும் போது மர்ம நபர்கள் இரண்டு பேரும் திடீரென பிரபாகரனின் கழுத்தை அறுத்து கொலை செய்துவிட்டு தப்பி ஓடினர். நடுவழியில் நீண்ட நேரமாக சரக்கு வாகனம் நின்றதால் அவ்வழியாக சென்ற பொதுமக்கள் சந்தேகமடைந்து சரக்கு வாகனத்தை எட்டிப் பார்த்தபோது ஓட்டுநர் கொலை செய்யப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். 

Amstrong: பகுஜன் சமாஜ் தலைவர் ஆம்ஸ்ட்ராங் வெட்டி படுகொலை; நண்பனின் இழப்பை தாங்காமல் கதறி துடித்த பா.ரஞ்சித்

உடனடியாக இது தொடர்பாக நெகமம் காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலின் பெயரில் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர் மோப்ப நாய் உதவியுடன் கொலையாளிகளை கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். கொலை செய்யப்பட்ட ஓட்டுநரின் உடலை கைப்பற்றிய காவல் துறையினர் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும், கொலைக்கான காரணம் குறித்து வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.