கோவையில் திருமணத்திற்கு விருப்பம் இல்லாத காரணத்தால் அரசு மருத்துவர்கள் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

கோவையில் திருமணத்திற்கு விருப்பம் இல்லாத காரணத்தால் அரசு மருத்துவர்கள் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

கோவை மாவட்டம் சிறுமுகை வ.உ.சி. வீதியை சேர்ந்தவர் துரைசாமி. இவரது மகன் சஞ்சீவிகுமார் (34). இவர் சிங்காநல்லூரில் உள்ள இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் குழந்தைகள் நல சிகிச்சை பிரிவில் மருத்துவராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில், சஞ்சீவிகுமாருக்கு அவரது பெற்றோர் திருமணம் செய்ய முடிவு செய்தனர். 

அதன்படி பல இடங்களில் பெண் பார்த்து வந்தனர். ஆனால், அவருக்கு திருமணத்தில் விருப்பம் இல்லாததால் பெண் பார்க்க வேண்டாம் என தனது பெற்றோரிடம் திட்டவட்டமாக கூறிவிட்டார். ஆனாலும், பெற்றோர் தொடர்ந்து பெண் பார்த்து வந்தனர். இதனால், சஞ்சீவிகுமார் கடந்த சில நாட்களாக மிகுந்த மனவேதனை இருந்து வந்துள்ளார். 

இந்நிலையில், வீட்டில் யாரும் இல்லாத நேரம் பார்த்து சஞ்சீவிகுமார் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனை பார்த்து அவரது பெற்றோர் அதிர்ச்சி அடைந்து கதறி அழுதனர். இந்த தற்கொலை தொடர்பாக போலீசார் தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் சஞ்சீவிகுமார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

இந்த விவகாரம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணத்திற்கு பயந்து தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதாவது காரணமா? என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்.