ஆதியோகி சிலை முன்பு நடைபெற்ற நிகழ்ச்சியில் நூற்றுக்கணக்கான சி.ஆர்.பி.எஃப் படை வீரர்கள் பங்கேற்று யோகா கற்றுக்கொண்டனர். வெள்ளலூரில் பாதுகாப்பு படை வீரர்களும் பங்கேற்றனர்.

சர்வதேச யோகா தினமான இன்று (ஜூன் 21) ஈஷா யோகா மையம் சார்பில் கோவை விமான நிலையம், ஆதியோகி சிலை அமைந்துள்ள மைதானம், சூலூர் விமானப் படை தளம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சிறப்பு யோகா நிகழ்ச்சிகள் இலவசமாக நடத்தப்பட்டன. இதில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்று பயன்பெற்றனர்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

கோவை விமான நிலையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் விமான நிலையத்தின் இயக்குநர் திரு. செந்தில் வளவன் அவர்கள் சிறப்பு விருந்தினராக பங்கேற்று நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்தார். இதை தொடர்ந்து காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை பயணிகளுக்கென தனியாக யோகா வகுப்புகள் நடைபெற்றன.

அரசு கலை, அறிவியல் கல்லூரிகள் ஜூலை 3ஆம் தேதி திறப்பு: உயர்கல்வித்துறை அறிவிப்பு

ஈஷா யோக மையத்தின் ஆதியோகி சிலை முன்பு நடைபெற்ற நிகழ்ச்சியில் நூற்றுக்கணக்கான சி.ஆர்.பி.எஃப். வீரர்கள் பங்கேற்று யோகா கற்றுக்கொண்டனர். அதேபோல், ஐ.என்.எஸ் அக்ரானி, விமான படை கல்லூரி, வெள்ளலூரில் உள்ள சிறப்பு அதிரடிப் படை வளாகம் போன்ற இடங்களில் பாதுகாப்பு படை வீரர்களுக்கு யோகா பயிற்சி கொடுக்கப்பட்டது.

இது தவிர, கற்பகம் கல்லூரி, இந்துஸ்தான் கலை கல்லூரி, எஸ்.என்.எஸ் பொறியியல் கல்லூரி உட்பட பல்வேறு கல்லூரிகளில் ஆயிரக்கணக்கான மாணவ, மாணவிகளுக்கு இலவசமாக யோகா கற்றுக்கொடுக்கப்பட்டது.

சமஸ்கிருதம், இந்தியில் பட்டம் பெற்றவருக்கு தான் அரசு வேலையா? கொந்தளிக்கும் எம்.பி. சு.வெங்கடேசன்

இந்நிகழ்ச்சிகளில் சத்குருவால் வடிவமைக்கப்பட்ட யோக நமஸ்காரம், நாடி சுத்தி போன்ற பயிற்சிகள் கற்றுக்கொடுக்கப்பட்டன. இப்பயிற்சிகளை தொடர்ந்து செய்துவருவதன் மூலம் முதுகு தண்டும், நரம்பு மண்டலமும் வலுபெறும். மன அழுத்தம் குறையும், உடல் மற்றும் மன நலன் மேம்படும்.

உலக யோகா தினத்தை முன்னிட்டு ஜூன் 1ஆம் தேதி முதல் கோவையில் பல்வேறு இடங்களில் இலவச யோகா வகுப்புகள் நடைபெற்று வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வகுப்புகள் ஜூன் மாதம் முழுவதும் நடத்தப்படுகின்றன. உங்கள் இருப்பிடத்திலேயே யோகா வகுப்பு நடத்த விரும்புவோர் isha.co/idysessionrequest என்ற இணையப் பக்கத்துக்குச் சென்று பதிவு செய்துகொள்ளலாம். ஆன்லைனில் இலவசமாக யோகா கற்றுக்கொள்ள isha.co/free-yogawebinars என்ற இணையப் பக்கத்தைப் பார்வையிடலாம்.

தமிழக அமைச்சர்களுக்கு குடும்ப வேலையை பார்ப்பதற்கே நேரம் போதவில்லை - ராஜேந்திர பாலாஜி குற்றச்சாட்டு