சமூக வலைத்தளங்களில் வீடியோக்களை பதிவேற்றி பிரபலமான ரவுடி பேபி சூர்யா, சிக்கா என்ற சிக்கந்தருடன் இணைந்து பல வீடியோக்களை பதிவிட்டு வந்தனர். இவரது வீடியோக்களில் சர்ச்சைகளுக்கும் ஆபாசமான வார்த்தைகளுக்கும் பஞ்சமிருக்காது. 

கோவையை சேர்ந்த பெண் குறித்து சமூக வலைதளத்தில் ஆபாசமாக பதிவுகளை வெளியிட்டதற்காக கைது செய்யப்பட்ட டிக் டாக் பிரபலம் ரவுடி பேபி சூர்யா மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

சமூக வலைத்தளங்களில் வீடியோக்களை பதிவேற்றி பிரபலமான ரவுடி பேபி சூர்யா, சிக்கா என்ற சிக்கந்தருடன் இணைந்து பல வீடியோக்களை பதிவிட்டு வந்தனர். இவரது வீடியோக்களில் சர்ச்சைகளுக்கும் ஆபாசமான வார்த்தைகளுக்கும் பஞ்சமிருக்காது. சூர்யா, சிக்காவுடன் ஆபாசமாக வீடியோ எடுத்து போடுவார். இவர்களின் லைவ் வீடியோ இன்னும் மோசமாக இருக்கும். மிகவும் அருவருக்கத்தக்க வகையில் பேசுவார்கள். அவ்வப்போது இவர்களுக்குள் சண்டை வரும், பின்னர் சில நாட்களில் மீண்டும் ஒன்று சேர்ந்து வீடியோ போடுவார்கள். இவர்களை கைது செய்ய வேண்டும் என சென்னை, மதுரை, கோவை உள்பட பல இடங்களில் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. 

இதில், குறிப்பாக கோவை பெரியநாயக்கன்பாளையம் பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவர் நடத்தி வரும் யூடியூப் சேனல் குறித்து ரவுடி பேபி சூர்யா ஆபாசமாக பேசியதாக புகார் அளிக்கப்பட்டது. இந்த புகாரின் பேரில், போலீசார் ரவுடி பேபி சூர்யா மற்றும் அவருடைய நண்பர் சிக்கா என்கிற சிக்கந்தரையும் கடந்த ஜனவரி 4 -ம் தேதி சைபர் கிரைம் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். 

இந்நிலையில், ரவுடி பேபி சூர்யா மீதும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க மாவட்ட ஆட்சியர் சமீரன் உத்தரவிட்டுள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்னர் சிக்கந்தர் மீதும் குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.