Asianet News TamilAsianet News Tamil

அய்யப்பன் ராமசாமிக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக TTF வாசன் மீது வழக்குப்பதிவு

யூடியூபர் அய்யப்பன் ராமசாமிக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக யூடியூபர் டிடிஎப் வாசன் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Case filed against TTF Vasan for threatening to kill Ayyappan Ramasamy
Author
First Published Mar 19, 2023, 8:09 PM IST

கோவையைச் மேட்டுப்பாளையத்தை அடுத்த வெள்ளியங்காட்டை சேர்ந்த யூடியூபர் டிடிஎப் வாசன், மற்றொரு யூடியூபர் அய்யப்பன் ராமசாமிக்கு வீடியோ வெளியிட்டு கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதுதொடர்பாக காரமடை காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில், டிடிஎப் வாசன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

அண்மையில் மதன் ரவிச்சந்திரன் தனது யூடியூப் பக்கத்தில் அய்யப்பன் ராமசாமி பற்றி குற்றச்சாட்டுகளை முன்வைத்து வீடியோ வெளியிட்டார். அதில் அய்யப்பன் ராமசாமி குறிப்பிட்ட கட்சியிடம் பணம் பெற்றுக்கொண்டு அந்தக் கட்சிக்கு வேண்டாதவர்களை இழிவுபடுத்திப் பேச ஒப்புக்கொண்டிருக்கிறார் என்று மதன் கூறுகிறார். அய்யப்பன் ராமசாமி கட்சிப் பிரமுகரைச் சந்தித்து பணம் பெறும் வீடியோவை ஆதாரமாகக் காட்டியுள்ளார்.

இந்தக் குற்றச்சாட்டினால் அய்யப்பன் ராமசாமியின் ஆதரவாளர்கள் பலர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மதன் வெளியிட்ட வீடியோவில் அய்யப்பன் ராமசாமி தனது பெண் ரசிகர்கள் பற்றி தரக்குறைவாகப் பேசி இருப்பதால் அவரது பெண் ரசிகர்கள் பலரும் அவர் மீது ஆத்தரத்தில் உள்ளனர். இந்தச் சூழலில் மதன் வெளியிட்ட வீடியோக்கு பதில் சொன்ன அய்யப்பன் ராமசாமி, எல்லாமே கட்டிங் ஒட்டிங் செய்யப்பட்டவை என்று கூறி இருந்தார்.

சொகுசு கார்களைத் திருடி போதைப் பொருள் கும்பலுக்கு விற்ற 4 பேர் கைது

இதனைத் தொடர்ந்து இன்ஸ்டாகிராமில் விளக்கம் அளித்து பதிவிட்டிருந்தார். இதனிடையே மற்றொரு யூடியூபரான டிடிஎப் வாசன் தனது யூடியூப் பக்கத்தில் புதிய வீடியோ வெளியிட்டு அய்யப்பன் ராமசாமி பெண்களை இழிவுபடுத்திப் பேசிவிட்டதாக கடுமையாகத் தாக்கிப் பேசியுள்ளார். அதில் அய்யப்பன் ராமசாமியை நேரடியாக மிரட்டி இருக்கிறார்.

"அய்யப்பன் ராமசாமி ப்ரோ... அதே சட்டைய போட்டு உங்க மேல வெறியோட வெயிட் பண்ணிட்டு இருக்கேன் ப்ரோ. கையில மட்டும் சிக்கினீன்னா மூஞ்சி மொகரை எல்லாம் ஒடைப்பேன் ப்ரோ. உண்மையாவேங்க... கையில மாட்டினான்னா மூஞ்சி மொகரை எல்லாம் ஒடைப்பேன்." என்று அந்த வீடியோவில் பேசி இருக்கிறார்.

இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானதை அடுத்து, காரமடை காவல் நிலையத்தில் டிடிஎப் வாசன் மீது புகார் அளிக்கப்பட்டது. அந்தப் புகாரின் பேரில், டிடிஎப் வாசன் அய்யப்பன் ராமசாமிக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக வழக்குப்பதிவு செய்துள்ளனர். டிடிஎப் வாசன் அவ்வப்போது சர்ச்சைக்குரிய வீடியோ வெளியிட்டு காவல்துறையிடம் சிக்குவது குறிப்பிடத்தக்கது.

காதலை எதிர்த்த அண்ணனை வெட்டிக் கூறு போட்ட தங்கை 8 ஆண்டுகளுக்குப் பின் கைது!

Follow Us:
Download App:
  • android
  • ios