சென்னை பட்டாபிராமைச் சேர்ந்தவர் ராஜ் குமார் (24 ). இவர் சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார் . இவருக்கு நேற்று முன்தினம் பிறந்தநாள் . இதனால் ராஜ் குமாரின் நண்பர்கள் இளைய சூர்யா (18 ) ,பிராங்கிளின் (18 ), சரத் (18 ) ஆகிய நான்கு பேரும் சேர்ந்து பாண்டிச்சேரி சென்று பிறந்தநாளை கொண்டாட முடிவு செய்தனர் .

அதற்காக பிராங்கிளின் ,தனது அக்காள் காரை எடுத்து வந்திருக்கிறார் . நேற்று முன்தினம் நள்ளிரவில்  நான்கு பேரும் சென்னையில் இருந்து கிளம்பியுள்ளனர். கார் மாமல்லபுரம் அருகே சென்றபோது முன்னால் சென்ற வாகனத்தை முந்தி செல்ல முயன்று இருக்கின்றனர் . அப்போது எதிரே சென்னையை நோக்கி அரசு பேருந்து வந்துகொண்டிருந்தது . கண்ணிமைக்கும் நேரத்தில் காரும் பஸ்சும் நேருக்கு நேர் மோதிக் கொண்டன . இதில் ராஜ்குமாரும் இளைய சூர்யாவும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர் . மற்ற இருவரும் கடுமையான காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் .

இந்த விபத்து குறித்து மாமல்லபுரம் காவல்துறை வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர் .

பிறந்தநாள் கொண்டாட சென்ற நேரத்தில் வாலிபர்கள் இருவர் உயிரிழந்த சம்பவம் உறவினர்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது .