ஷாக்கிங் நியூஸ்.. சென்னையில் சிக்கன் ரைஸ் சாப்பிட்ட இளைஞர் உயிரிழப்பு..!
சென்னை வியாசர்பாடியை சேர்ந்த பிசிஏ பட்டதாரி மகாவிஷ்ணு (21). நேற்று இரவு அவரது நண்பர் ராம்குமார் என்பவரின் பிறந்த நாளை முன்னிட்டு ஹோட்டல் ஒன்றில் நண்பர்கள் சேர்ந்து மது அருந்தியுள்ளனர்.
சென்னையில் சிக்கன் ரைஸ் சாப்பிட்டு விட்டு தனது நண்பர் வீட்டில் உறங்கிய நிலையில் இளைஞர் திடீரென உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை வியாசர்பாடியை சேர்ந்த பிசிஏ பட்டதாரி மகாவிஷ்ணு (21). நேற்று இரவு அவரது நண்பர் ராம்குமார் என்பவரின் பிறந்த நாளை முன்னிட்டு ஹோட்டல் ஒன்றில் நண்பர்கள் சேர்ந்து மது அருந்தியுள்ளனர். பின்னர், நண்பர்களுடன் சேர்ந்து சிக்கன் ரைஸ் சாப்பிட்டு விட்டு போதையில் தூங்கியுள்ளார். இந்நிலையில், தூங்கி கொண்டிருந்த மகாவிஷ்ணு நீண்ட நேரமாகியும் எழாமல் இருந்துள்ளார். அப்போது அவரது நண்பர்கள் அவரை எழுப்பிய போது மூச்சு பேச்சு இல்லாமல் இருந்துள்ளார்.
இதையும் படிங்க;- மீண்டும் மிரட்டப்போகிறதா கனமழை? எந்த பகுதி தெரியுமா? தமிழ்நாடு வெதர்மேன் சொன்ன முக்கிய தகவல்..!
இதனால், அதிர்ச்சியடைந்த நண்பர்கள் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தார். நண்பன் உயிரிழந்த செய்தியை அறிந்து நண்பர்கள் அழுது கதறினர். பெற்றோர்களும் மருத்துவமனைக்கு விரைந்து நெஞ்சில் அடித்துக் கொண்டு கதறிய சம்பவம் காண்போர் கண்களில் கண்ணீர் வர வழைத்தது.
இந்த சம்பவம் தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் மகாவிஷ்ணு உடலை பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சிக்கன் ரைஸ் சாப்பிட்டு விட்டு இளைஞர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க;- பயங்கர சத்தத்துடன் வெடித்த அரசு பேருந்தின் டயர்!திடீரென கொழுந்துவிட்டு எரிந்த தீ!அலறியடித்து வெளியேறிய பயணிகள்