நடுவானில் விமானம் பறந்து கொண்டிருந்த போது சிகரெட் புகைத்த பயணி கைது செய்யப்பட்டார்.

அபுதாபியில் இருந்து நேற்று முன்தினம் விமான ஒன்று மும்பைக்கு வந்து கொண்டிருந்தது. அந்த விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்த போது, தீபக் சவுதரி(26) என்ற பயணி கழிப்பறைக்குள் சென்று புகைப்பிடித்தார். உள்ளே அவர் புகைப்பிடித்ததை கழிப்பறைக்கு வெளியே இருந்த எச்சரிக்கை மணி காட்டிக் கொடுத்தது.

இதைத் தொடர்ந்து விமானத்தின் கேப்டன் மற்றும் மற்ற சிப்பந்திகள் உஷாராகி அந்த பயணியை வெளியே அழைத்து எச்சரித்தனர். பின்னர் விமான மும்பை சத்ரபதி சிவாஜி விமான நிலையத்தில் தரையிறங்கியது புகைப்பிடித்த தீபக் சவுதரிக்கு எதிராக சகார் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் கைது செய்யப்பட்ட தீபக் சவுதரி பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.