சென்னையில் தள்ளுவண்டியில் புரோட்டா சாப்பிட்ட இளைஞர் உயிரிழப்பு
சென்னையில் புரோட்டா சாப்பிட்டுவிட்டு குளிர்பானம் அருந்திய இளைஞர் திடீரென உடல் நிலை பாதிக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் உறவினர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை வியாசர்பாடி சர்மா நகர் பகுதியைச் சேர்ந்தவர் கார்த்திக். இவர் ரெட்டேரி ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் முகவராக பணியாற்றி வந்தார். இந்நிலையில், நேற்று இரவு 10 மணியளவில் சாலையோரம் இருந்த தள்ளு வண்டி கடையில் புரோட்டா வாங்கி வந்து வீட்டில் வைத்து சாப்பிட்டுள்ளார். புரோட்டா சாப்பிட்ட சிறிது நேரத்திலேயே கார்த்திக்கிற்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து அவர் அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
அரியலூரில் புயல் வேகத்தில் சென்ற தனியார் பேருந்து கவிழ்ந்து ஒருவர் பலி, பலர் படுகாயம்
தனியார் மருத்துவமனையில் கார்த்திக்கின் உடல்நிலை மேலும் மோசமடையவே சென்னை ஸ்டேன்லி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் கார்த்திக் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த மகாகவி பாரதி நகர் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தமிழகத்தில் பொதுத்தேர்வு தேதிகள் மாற்றம்; அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவிப்பு
இது தொடர்பாக கார்த்திக்கின் பெற்றோர் கூறுகையில், இரவில் புரோட்டா சாப்பிட்டுவிட்டு குளிர்பானம் அருந்திய நிலையில் அவரது உடல்நிலை திடீரென பாதிக்கப்பட்டு உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். இருப்பினும் உடற்கூறாய்வு அறிக்கை கிடைக்கப்பெற்ற பின்னரே இளைஞரின் மரணம் தொடர்பான தகவல் வெளியாகும் என்று காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.