சென்னையில் பரிதாபம்; கணவனுடன் பேசிக்கொண்டிருந்த பெண் தவறி விழுந்து பலி

சென்னை திருமுல்லை வாயில் அருகே மாடியில் நின்றுகொண்டு கணவனுடன் பேசிக்கொண்டிருந்த இளம் பெண் தவறி கீழே விழுந்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

young woman accidentally fall in down from building and death in chennai

சென்னை ஆவடியை அடுத்த திருமுல்லைவாயில் பகுதியைச் சேர்ந்தவர்கள் பிரவீன் குமார், அபிராமி தம்பதி. இருவரும் பொறியியல் படித்துள்ள நிலையில் பிரவீன்குமார் வளசரவாக்கம் பகுதியில் உள்ள ஐடி நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வருகிறார். இவர்களுக்கு கடந்த இரண்டரை ஆண்டுகளுக்கு முன்பு திருமணமான நிலையில், ஒரு வயதில் பெண் குழந்தை உள்ளது. 

இவர்களது வீடு 2 மாடிகளைக் கொண்ட அடுக்குமாடி வீடாகும். இந்நிலையில் இருவரும் இரவு நேரத்தில் மாடிக்குச் சென்று பேசுவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். அதன்படி நேற்றும் இருவரும் மாடியில் அமர்ந்து பேசிக் கொண்டு இருந்தனர். அபிராமி மாடியின் கைப்பிடி சுவற்றில் அமர்ந்து பேசிக் கொண்டு இருந்ததாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், திடீரென நிலைத் தடுமாறி அபிராமி கீழே விழுந்தார். தலைகீழாக அபிராமி கீழே விழுந்த நிலையில் தலை மற்றும் உடலில் பலத்த காயம் ஏற்பட்டு அந்த இடமே ரத்த வெள்ளமாக மாறியது. இதனால் பதறிப்போன பிரவீன் குமார் அக்கம் பக்கத்தினரின் உதவியுடன் அவரை மீட்டு அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

திருமணம் நிச்சயிக்கப்பட்ட நிலையில் தந்தை உயிரிழப்பு; மணமகனின் செயலால் நெகிழ்ந்து போன உறவினர்கள்

அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அபிராமி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். திருமணமாகி இரண்டரை ஆண்டுகள்தான் நிறைவடைந்துள்ளதால் இது தொடர்பாக ஆர்.டி.ஓ அதிகாரி விசாரணை மேற்கொண்டு வருகிறார். அபிராமியின் மரணத்தால் அவரது உறவினர்களும், அக்கம் பக்கத்தினரும் பெரும் சோகத்திற்கு ஆளாகி உள்ளனர்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios