தனியார் ஊடக நிறுவனத்தில் பணியாற்றி வரும் பெண் ஊழியர் ஒருவர் சென்னையில் இருந்து தாம்பரம் வந்துகொண்டிருந்த மின்சார ரயிலில் கிண்டி ஸ்டேஷனில் இருந்து இளைஞர் ஒருவர் எறியுள்ளார். இரவு நேரம் என்பதால் பெண்கள் கம்பார்ட்மெண்டில் ஏறியுள்ளார். அப்போது, போதையில் இருந்த வாலிபர் ஒருவர் அதே பெட்டியில் ஏறி அந்த பெண்ணுக்கு எதிராக அமர்ந்து பயணம் செய்துள்ளார். 

சென்னை புறநகர் ரயிலில் தனியாக இருந்த பெண்ணின் முன்பு மர்ம நபர் ஒருவர் சுய இன்பம் செய்ததை அடுத்து அந்த பெண் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் அந்த இளைஞரை கைது செய்தனர்.

தனியார் ஊடக நிறுவனத்தில் பணியாற்றி வரும் பெண் ஊழியர் ஒருவர் சென்னையில் இருந்து தாம்பரம் வந்துகொண்டிருந்த மின்சார ரயிலில் கிண்டி ஸ்டேஷனில் இருந்து இளைஞர் ஒருவர் எறியுள்ளார். இரவு நேரம் என்பதால் பெண்கள் கம்பார்ட்மெண்டில் ஏறியுள்ளார். அப்போது, போதையில் இருந்த வாலிபர் ஒருவர் அதே பெட்டியில் ஏறி அந்த பெண்ணுக்கு எதிராக அமர்ந்து பயணம் செய்துள்ளார். 

அந்த பெட்டியில் இவர்களை தவிர வேறு எந்த பயணிகளும் இல்லாத நிலையில், ரயில் தாம்பரம் நோக்கி சென்று கொண்டிருந்தபோது திடீரென அந்த வாலிபர் எழுந்து நின்று சுய இன்பத்தில் ஈடுபட்டுள்ளார். அதனால் பேரதிர்ச்சி அடைந்த பெண் அந்த இளைஞரை திட்டிக்கொண்டே தனது செல்போனில் வீடியோ பதிவு செய்தார். இதனையடுத்து, அந்த இளைஞர் ரயில் நின்றவுடன் எதிர் பக்கமாக கீழே குதித்து சென்றார்.

இதனை தொடர்ந்து அந்த பெண் நடந்த விஷயத்தை விளக்கி வீடியோ வெளியிட்டதையடுத்து சமூக வலைதளங்களில் வைரலானது. அதில், இரவில் ரயிலில் செல்லும் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்றும், பெண்கள் பெட்டியில் ஒரு பாதுகாவலராக இருக்க வேண்டும் என்றும், பேருந்தில் சிசிடிவி இருப்பது போல ரயிலில் சிசிடிவி கேமராக்கள் பொருத்த வேண்டும் என்றும் வலியுறுத்தி கூறினார். இதுகுறித்து தாம்பரம் ரயில்வே காவல் நிலையத்தில் பாதிக்கப்பட்ட பெண் வீடியோ ஆதாரத்துடன் புகார் அளித்தார். இந்த புகாரின் அடிப்படையில் குற்ற செயலில் ஈடுபட்ட மீனம்பாக்கத்தைச் சேர்ந்த இளைஞரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.