மயிலாப்பூர் சாய்பாபா கோவிலில் துர்கா ஸ்டாலின், மகளுடன் வழிபாடு..!
சென்னை மயிலாப்பூர் சாய்பாபா கோவிலில் முதலமைச்சர் ஸ்டாலினின் மனைவி துர்கா ஸ்டாலின் மற்றும் அவரது மகள் செந்தாமரை ஆகியோர் தரிசனம் செய்தனர்.
சென்னை மயிலாப்பூர் சாய்பாபா கோவிலில் முதலமைச்சர் ஸ்டாலினின் மனைவி துர்கா ஸ்டாலின் மற்றும் அவரது மகள் செந்தாமரை ஆகியோர் தரிசனம் செய்தனர்.
பகுத்தறிவு பாசறையில் இருந்து வந்த முதல்வர் ஸ்டாலின், கடவுள் நம்பிக்கையற்றவர் என்றாலும், துர்கா அதீத கடவுள் பக்தி கொண்டவர். அவரது செயல்பாடுகளுக்கு ஸ்டாலின் தடை விதிப்பதில்லை. மு.க.ஸ்டாலின் சட்டசபை தேர்தலில் வெற்றிபெற்று திமுக ஆட்சியை பிடிக்க வேண்டும் என பல்வேறு கோயில்களுக்கு சென்று துர்கா ஸ்டாலின் பிராத்தனை செய்து வந்தார். அவரது வேண்டுதல்கள் வீண் போகவில்லை. முதல்வராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற பிறகும் பல்வேறு கோயில்களுக்கு சென்று தனது வேண்டுதல்களை துர்கா ஸ்டாலின் நிறைவேற்றி வருகிறார்.
இந்நிலையில், 104 வது சாய்பாபா சமாதி தினத்தை முன்னிட்டு மயிலாப்பூர் சாய் பாபா கோவிலில் ஏராளமான மக்கள் காலை முதல் சிறப்பு வழிபாடு மேற்கொண்டனர். அப்போது, தமிழக முதல்வர் ஸ்டாலினின் மனைவி துர்கா ஸ்டாலின் மற்றும் அவரது மகள் செந்தாமரையுடன் சுவாமி தரிசனம் மேற்கொண்டார். சாய் பாபா கோவிலை சுற்றி வந்து சிறப்பு வழிபாடு மேற்கொண்டு சாய் பாபாவிற்கு மாலை அணிவித்து தரிசனம் செய்தனர்.
அதன் பின்னர் சிலையின் காலில் விழுந்து வழங்கினார். வாரம் தோறும் மயிலாப்பூர் சாய்பாபா கோவிலுக்கு துர்கா ஸ்டாலின் வருவது வழக்கமாக கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.