பெண்கள் பணியிடங்களில்  சந்திக்கும் பாலியல் சீண்டல்கள் குறித்து புகார் அளிக்க தயக்கம் காட்டி வருவதுடன், புகார் கொடுத்தால் அது தனது எதிர்காலத்தை பாதிக்குமோ என்று அஞ்சுவதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.

நாடு முழுவதும் பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது,  சர்வதேச அமைப்புகளும் அரசும் அதற்கான பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வரும் நிலையில் பாலியல் சீண்டல்களில் ஈடுபடும் அதிகாரிகளை, சமூக வெளியில் பகிரங்கப்படுத்தும் வகையில் மீடு இயக்கம் தொடங்கி அது பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது.  இதனால் உயர்மட்டத்தில் இருக்கும் பல நிறுவனங்களின் அதிகாரிகளின் தலைகள் உருளும் நிலையில், இவ்வியக்கம் ஓரளவுக்கு பெண்கள் மத்தியில் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.  இதனால் பல பெண்கள் தைரியமாக முன்வந்து தங்களுக்கு நேர்ந்த பாலியல் சீண்டல்கள் பகிரங்கப்படுத்தி வருகின்றனர்.

இந் நிலையில் பணியிடங்களில் நடக்கும் பாலியல் சீண்டல்கள் தொடர்பாக பெண்கள் என்ன நினைக்கிறார்கள். அவர்களுடைய கருத்து என்ன என்பது குறித்துடன் மீடு இயக்கத்தின் தீவிரத்தை உணர்த்தும் நோக்கில்,  சர்வே மங்கி என்ற குழு , பணிக்கு செல்லும் பெண்கள் மத்தியில்  ஆய்வு மேற்கொண்டது. அதன் முடிவில்  55 சதவீதம்  பெண்கள் பாலியல் சீண்டல் குறித்து புகார் அளித்தால் தங்களது எதிர்காலம் பாதிக்கப்படும் என்ற அச்சத்தில் அதை தவிப்பதாகவும், சுமார் 68 சதவீதம் பெண்கள் மீடு இயக்கத்தின் மூலம் சீண்டலுக்கு  தீர்வு கிடைக்கும் என்று நம்புவதாகவும் சர்வேயில் தெரியவந்துள்ளது. கடந்த ஆண்டு நடத்தப்பட்ட இந்த சர்வேயின் முடிவு தற்போது வெளியாகி உள்ளது. அதில் 97% ஆக இந்த பெண்களின் பாதுகாப்பு தற்போது 85 சதவீதமாக குறைந்துள்ளதும் தெரியவந்துள்ளது. 

பெண்கள் புகார் கொடுக்க தயங்குவதற்கான காரணங்கள் என்னவென்றால், உயர் அதிகாரி மீது புகார் கொடுத்தால், தங்கள் எதிர்காலத்தை அது பாதிக்கும்.  என்பதுடன், ஒருவேலை சம்மந்தப்பட்ட அதிகாரி,  தப்பித்து விட்டாள் வேலை இழக்க நேரிடும் என்ற அச்சத்துடன், புகார் சுமத்தப்பட்டவரைவிட புகார் கொடுத்த தங்களுக்கே அது அவமானத்தை ஏற்படுத்தும்  என்றும் அவர்கள் கருதுவதே காரணம் என தெரியவந்துள்ளது. அத்துடன் பெண்களின் பாதுகாப்பு குறித்து ஒவ்வொரு நிறுவனங்களும் தங்களுக்கு ஏற்படும் பாலியல் சீண்டல் குறித்து எப்படி புகார் அளிப்பது,  எப்படி அதை அணுகுவது என்ற விழிப்புணர்வை சரியாக செய்வதில்லை என்றும் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.