லூப் பாயிண்ட் எனப்படும் பாய்லருக்கு செல்லும் பைப் லைனில் ஏற்பட்ட எண்ணெய் கசிவே பாய்லர் வெடித்ததற்கான காரணம் எனத் தெரிகிறது. 

சென்னை தண்டையார்பேட்டையில் உள்ள இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவன ஆலையில் புதன்கிழமை ஏற்பட்ட பாய்லர் வெடிப்பு விபத்தில் ஒரு தொழிலாளி உயிரிழந்தார். ஒருவர் படுகாயமடைந்துள்ளார். மேலும் சிலர் காயம் அடைந்துள்ளனர்.

உடனடியாக ஐந்து தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தன. இந்தியன் ஆயில் நிறுன ஆலையில் தீயணைப்பு ஏற்பாடுகள் இருப்பதால், தீயணைப்பு வாகனங்கள் வருவதற்கு முன்பே தீ அணைக்கப்பட்டுவிட்டது.

Scroll to load tweet…

"எத்தனால் சேமிப்பு தொட்டியில் வெல்டிங் செய்வது போன்ற பணிகளில் தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்த போது, இந்தச் சம்பவம் நடந்துள்ளது" என்று தீயணைப்பு மற்றும் மீட்பு சேவை அதிகாரி ஒருவர் சொல்கிறார்.

வெல்டராக பணிபுரிந்து வந்த ஒரு தொழிலாளி இந்த விபத்து நடத்தபோது சம்பவ இடத்திலேயே உயிரிழந்துவிட்டார். அதே நேரத்தில் பலத்த காயமடைந்த மற்றொரு தொழிலாளி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

லூப் பாயிண்ட் எனப்படும் பாய்லருக்கு செல்லும் பைப் லைனில் ஏற்பட்ட எண்ணெய் கசிவே பாய்லர் வெடித்ததற்கான காரணம் எனத் தெரிகிறது. ஆனால், விபத்துக்கான காரணம் இன்னும் உறுதி செய்யப்படவில்லை.

2023ஆம் ஆண்டில் பயனர்களால் அதிகமாக டெலிட் செய்யப்பட்ட 2 மொபைல் ஆப்ஸ்!