Asianet News TamilAsianet News Tamil

ஒர்க் ஃப்ரம் ஹோம் முறையைப் பின்பற்றலாம்... சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் அட்வைஸ்..!

மத்திய கிடங்கில் உள்ள 6 லட்சம் கொரோனா தடுப்பூசிகளை கேட்டுள்ளோம். 2,07 லட்சம் கோவாக்சின் தடுப்பூசி கையிருப்பில் உள்ளது என சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.

Work from home method can be followed... health secretary radhakrishnan
Author
Chennai, First Published Apr 14, 2021, 7:23 PM IST

மத்திய கிடங்கில் உள்ள 6 லட்சம் கொரோனா தடுப்பூசிகளை கேட்டுள்ளோம். 2,07 லட்சம் கோவாக்சின் தடுப்பூசி கையிருப்பில் உள்ளது என சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.

சென்னை, போரூரில் சுகாதாரத் துறைச் செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன் இன்று தடுப்பூசி திருவிழாவைத் தொடங்கிவைத்த பிறகு, செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர்;- தற்போது பிற மாநிலங்களைப் போல தமிழகத்தில் முழு ஊரடங்கு அறிவிக்கப்படும் சூழல் இல்லை. ஆனால், அதே நேரத்தில் இது கொள்கை ரீதியான முடிவு. எங்கள் அளவில் (சுகாதாரத் துறை) எந்த முடிவும் முடிவெடுக்க முடியாது. முதல்வருடன் கலந்து ஆலோசிக்காமல் நான் எதுவும் சொல்ல முடியாது.

Work from home method can be followed... health secretary radhakrishnan

கொரோனா பரவலை குறைக்க பொதுமக்கள் ஒத்துழைப்பு அவசியம். அதிகமான தொற்று ஏற்படும் இடங்களில் தனி கவனம் செலுத்தி வருகிறோம். அடுத்த 2 வாரங்கள் மிக மிக முக்கியம் என்பதால் மக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். அடுத்த 2 வாரங்களுக்கு அனைவரும் மாஸ்க் அணிந்து விதிமுறைகளை பின்பற்றினால், பாதிப்பு குறையும். மகாராஷ்டிராவில் தினந்தோறும் சுமார் 60,000 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். மொத்தமாகத் தற்போது 5.93 லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகின்றனர். அதனால் ஊரடங்கு முடிவை அந்த மாநிலம் எடுத்துள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் வணிகம், விற்பனை, திருமணம், இறப்பு, கூட்டங்கள் உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. 

Work from home method can be followed... health secretary radhakrishnan

வீட்டிலிருந்து பணி செய்ய வாய்ப்புள்ளவர்கள் அனைவரும் வீட்டில் இருந்தே பணியாற்ற வேண்டும். நோய் பரவும் சூழலில் அனைத்து நிறுவனங்களும் இதைக் கடைப்பிடிக்க வேண்டும். தடுப்பூசி போடுவோர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க, குடியிருப்பு நல மையங்களின் நிர்வாகிகளை அழைத்து அவர்களிடமும் தடுப்பூசி குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தத் திட்டமிட்டுள்ளோம் என ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

Follow Us:
Download App:
  • android
  • ios