ஃபாக்ஸ்கான் நிறுவனத்தில் 18,720 பெண் ஊழியர்களுக்கு ரூ.706 கோடியில் குடியிருப்பு வசதி!
இந்தியாவில் தொழிலாளர்களுக்காக கட்டப்பட்ட மிகப்பெரிய குடியிருப்பு வளாகம் இது. இந்தக் குடியிருப்பு 20 ஏக்கர் பரப்பளவில், தலா 10 தளங்கள் கொண்ட 13 பிளாக்குகளை உள்ளடக்கியது. 18,720 தொழிலாளர்கள் தங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
சென்னையில் நாட்டிலேயே மிகப்பெரிய தொழிலாளர் குடியிருப்பு வளாகத்தை தமிழ்நாடு அரசு கட்டியுள்ளது. 2021ஆம் ஆண்டில் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ஃபாக்ஸ்கான் ஆலையில் பணிபுரியும் பெண்கள் நடத்திய போராட்டத்தைத் தொடர்ந்து தமிழக அரசு இந்தக் குடியிருப்புக் கட்டடத்தைத் கட்டியுள்ளது.
சனிக்கிழமை, சென்னைக்கு அருகில் உள்ள ஸ்ரீபெரும்புதூரில் ரூ.706 கோடி செலவில் கட்டப்பட்ட இந்தக் குடியிருப்பு வளாகத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். ஆப்பிள் நிறுவனத்துக்கு உதிரி பாகங்கள் சப்ளை செய்யும் முக்கிய நிறுவனமான ஃபாக்ஸ்கான் இந்தியாவில் திருமணமான பெண்களுக்கு வேலை கொடுக்க மறுப்பதாக புகார் வெளியான சில வாரங்களில் இந்தக் கட்டடம் திறக்கப்பட்டுள்ளது கவனிக்கத்தக்கது.
தமிழ்நாடு மாநில தொழில்கள் மேம்பாட்டுக் கழகம் (SIPCOT) மூலம் கட்டப்பட்ட இந்தக் குடியிருப்பு 20 ஏக்கர் பரப்பளவில், தலா 10 தளங்கள் கொண்ட 13 பிளாக்குகளை உள்ளடக்கியது. 18,720 தொழிலாளர்கள் தங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசின் தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா திடீர் மாற்றம்! அடுத்து வருபவர் யார்?
4,000 பேர் அமரக்கூடிய பெரிய உணவுக்கூடம், உட்புற விளையாட்டு வசதிகள், பல்வேறு விளையாட்டுகளுக்கான அரங்குகள் ஆகியவையும் உள்ளன. சூரிய மின்சக்தி உற்பத்தி, மழைநீர் சேகரிப்பு, கழிவுநீர் சுத்திகரிப்பு மற்றும் திடக்கழிவு மேலாண்மை அமைப்புகள் இருக்கின்றன. பாதுகாப்புக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் வளாகம் முழுவதும் 1,170 சிசிடிவி கேமராக்கள் நிறுவப்பட்டுள்ளன.
திறப்பு விழாவில் பேசிய ஃபாக்ஸ்கான் நிறுவனத்தின் தலைவர் யங் லியு, தங்கள் நிறுவனத்தின் உற்பத்தியில் திருமணமான பெண்கள் முக்கியப் பங்காற்றுவதாகத் தெரிவித்தார். மேலும், பல பெண் தொழிலாளர்கள் சிறிய நகரங்களில் இருந்து வந்து இந்தத் தங்குமிடத்தில் வசிப்பார்கள் என்றும் அவர் குறிப்பிட்டார். இந்த வளாகம், ஜீரோ-டிஸ்சார்ஜ் தொழில்நுட்பத்தின் மூலம் நிலைத்தன்மை கொண்டது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
இந்தியாவில் தொழிலாளர்களுக்காக கட்டப்பட்ட மிகப்பெரிய குடியிருப்பு வளாகம் இது என்று தமிழ்நாடு அரசு கூறியுள்ளது. 2021ஆம் ஆண்டில் ஸ்ரீபெரும்புதூர் ஆலையில் பணிபுரிந்த பெண்கள் போராட்டம் நடத்தியதை அடுத்து, ஃபாக்ஸ்கான் ஆலை தற்காலிகமாக மூடப்பட்டது. இதன் எதிரொலியாக ஃபாக்ஸ்கான் பெண் ஊழியர்களுக்காக இந்தக் குடியிருப்பைக் கட்டும் பணி தொடங்கியது.
விழாவில் பேசிய தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், தமிழ்நாட்டில் உள்ள ஃபாக்ஸ்கான் நிறுவனத்தின் ஆலையில் 41,000 தொழிலாளர்கள் பணிபுரிந்து வருவதாகவும், அதில் 35,000 பேர் பெண்கள் என்றும் கூறினார். “தமிழ்நாட்டில் ஆண்களுக்கு நிகரான பெண்கள் என்பது மட்டுமல்ல; பல துறைகளில், பெண்கள் முன்னணியிலும் உள்ளனர். குறிப்பாக தொழில்துறை மற்றும் அதிநவீன உற்பத்தியில் பெண்கள் முன்னிலையில் இருக்கிறார்கள்" என்று கூறினார். 41 சதவீதம் பெண்கள் பங்கேற்புடன் தமிழ்நாடு இந்தியாவிலேயே முன்னணியில் உள்ளது எனவும் முதல்வர் எடுத்துரைத்தார்.
சீனாவுக்கு வெளியே ஃபாக்ஸ்கான் நிறுவனத்திற்கு அதிக பணியாளர்கள் உள்ள நாடு இந்தியா. அதிலும் குறிப்பாக, இந்தியாவில் தமிழ்நாட்டில் தான் ஃபாக்ஸ்கான் நிறுவனம் அதிக பணியாளர்களைக் கொண்டிருக்கிறது.
Raksha Bandhan 2024: ஏன் இந்த நேரத்தில் ராக்கி கயிறு கட்டக் கூடாது? ரகசியம் இதுதான்!