Weather update:தென்கிழக்கு வங்ககடல் பகுதியில் உருவாகியிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி, தாழ்வுமண்டலமாக வலுப்பெற்றுள்ளது. இதனால் தமிழகத்தில் எந்தெந்த மாவட்டங்களில் கனமழை பெய்யும், சென்னையில் மழை எப்படி இருக்கும் என்பது குறித்து தமிழ்நாடு வெதர்மேன் விளக்கம் அளித்துள்ளார்.
தென்கிழக்கு வங்ககடல் பகுதியில் உருவாகியிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி, தாழ்வுமண்டலமாக வலுப்பெற்றுள்ளது. இதனால் தமிழகத்தில் எந்தெந்த மாவட்டங்களில் கனமழை பெய்யும், சென்னையில் மழை எப்படி இருக்கும் என்பது குறித்து தமிழ்நாடு வெதர்மேன் விளக்கம் அளித்துள்ளார்.
தெற்கு வங்க கடலின் மத்திய பகுதி மற்றும் இந்திய பெருங்கடல் பகுதியில் நிலவும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று சென்னைக்கு 700 கிமீ தெற்கே தென்கிழக்கே மையம் கொண்டுள்ளது. இத்தாழ்வு மண்டலம் நாளை ஆழ்ந்த தாழ்வு மண்டலமாக மாறி, மெதுவாக வடக்கே-வடகிழக்கே நகர்ந்து அடுத்த 48 மணி நேரத்தில் வலுவிழக்கக்கூடும்.

இந்தக் காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் தமிழகத்தில் எந்தெந்த மாவட்டங்களில் மழை, சென்னைக்கு எத்தனை நாட்களுக்கு மழை, மழைஎத்தனை நாட்கள் இருக்கும் என்பது குறித்து தமிழ்நாடு வெதர்மேன் பெயரில் எழுதிவரும் பிரதீப் ஜான், ஏசியாநெட் தமிழ் இணையதளத்துக்கு பிரத்யேகப்பேட்டியளித்தார். அவர் கூறியதாவது:
குறைந்தகாற்றழுத்த தாழ்வுப்பகுதியால் தமிழகத்தில் எப்போது மழை தொடங்கும்?
குறைந்தகாற்றழுத்த தாழ்வுப்பகுதியால் தமிழகத்துக்கு 3ம் தேதியிலிருந்தே மழை கிடைத்திருக்க வேண்டும். ஆனால், மேற்குதிசையிலிருந்து வரும் காற்று இதை வரவிடாமல் தடுப்பதால் காற்றழுத்த தாழ்வுப்பகுதிமெல்ல நகர்கிறது. 5-ம் தேதி காலை முதல் 7ம் தேதிவரை தமிழகத்தின் வடகடலோர மாவட்டங்கள், புதுச்சேரி, சென்னையில் மழையை எதிர்பார்க்கலாம்.

எத்தனை நாட்களுக்கு மழை நீடிக்கும், எந்தெந்த மாவட்டங்களுக்கு மழை
வடகடலோர மாவட்டங்களுக்கே மழைக்கு வாய்ப்பு அதிகம். இந்தகாற்றழுத்த தாழ்வுப்பகுதி, தாழ்வுமண்டலமாக, தீவிரமண்டலமாக மாறி கரையைக் கடந்தபின், தென் மாவட்டங்களில் ஒரு இடங்களிலும், வட உள்மாவட்டங்களிலும் 8 மற்றும் 9 தேதிகளில் மழை இருக்கும். காற்றழுத்த தாழ்வுப்பகுதி எந்தத் திசையி்ல் செல்கிறது என்பதைப் பொறுத்து மாவட்டங்களில் மழை இருக்கும். மேற்குதிசையிலிருந்து வரும் காற்றால்தான் மழை நமக்கு தாமதமாகி வருகிறது. அந்த காற்று இல்லாவிட்டால், வடஉள்மாவட்டங்களில் நல்ல மழை இருக்கும்.

காற்றுடன் கூடிய மழையாக இருக்குமா?
கடலிலேயே ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுமண்டலமாக மாறி, தமிழகத்துக்கு அருகே வரும்போது வலுவிழந்த நிலையில்தான் இருக்கும். ஆதலால், காற்றுடன் கூடிய மழை இருக்கும். அனைவரும் பயப்படும் வகையி்ல், சேதங்களை ஏற்படுத்தும் வகையில் காற்று இருக்காது. சராசரியாக மணிக்கு 30 முதல் 40கி.மீ வேகத்தில் காற்று வீசக்கூடும்.
இவ்வாறு பிரதீப் ஜான் தெரிவித்தார்
