ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் முதுகலை மருத்துவ மாணவி சோபியா விஷ ஊசியை தனக்கு தானே செலுத்திக் கொண்டு தற்கொலை செய்திருக்க வாய்ப்புள்ளதாக போலீசார் கூறுகின்றனர். 

ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் முதுகலை மருத்துவ மாணவி சோபியா விஷ ஊசியை தனக்கு தானே செலுத்திக் கொண்டு தற்கொலை செய்திருக்க வாய்ப்புள்ளதாக போலீசார் கூறுகின்றனர். 

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே உள்ள செங்குந்தம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் சோபியா (27). இவர் சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவக் கல்லூரியில் அனஸ்தீஷியா பிரிவில் 3ம் ஆண்டு முதுகலை படிப்பு படித்து வந்தார். இதற்காக அங்குள்ள விடுதியில் தங்கியிருந்தார்.

இந்நிலையில். சோபியா தங்கியிருந்த அறை நேற்று முன்தினம் வெகுநேரம் திறக்கப்படவில்லை. இதனால் சந்தேகமடைந்த விடுதி காப்பாளர் தமயந்தி உள்ளிட்டோர் பலமுறை தட்டியும் கதவை திறக்காததால் உடைத்து உள்ளே சென்று பார்த்து உள்ளனர். அப்போது சோபியா உயிரிழந்து கிடந்தார். அவரது கையில் ஊசி குத்தப்பட்டதற்கான அடையாளமும் உடல் அருகே சிரிஞ்சும் கிடந்துள்ளது. மேலும், சோபியா மூக்கில் ரத்தம் வழிந்த நிலையிலும், வாயில் நுரையுடனும், உடல் நீலநிறத்திலும் இறந்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.

இதுதொடர்பாக உடனே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் சோபியாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் கூறுகையில்;- சோபியா விஷ ஊசியை தனக்கு தானே செலுத்திக் கொண்டு தற்கொலை செய்திருக்க வாய்ப்பு உள்ளது. மேலும் அவர், கடந்த சில தினங்களாக மிகுந்த மன உளைச்சலில் இருந்ததாக சோபியாவின் தோழிகள் தெரிவித்தனர்.