Asianet News TamilAsianet News Tamil

‘2வது அலையை எதிர்பார்க்கவில்லை’...மத்திய அரசின் பதிலால் கடுப்பான தலைமை நீதிபதி... சரமாரி கேள்விகளால் துளைத்த

கடந்த 14 மாதங்களாக மத்திய அரசு என்ன செய்து கொண்டிருந்தது எனவும், இரண்டாவது அலை தீவிரமாகியுள்ள தற்போதைய நிலையில் நடவடிக்கைகளை துரிதப்படுத்தியது குறித்தும் கேள்வி எழுப்பினார்.

Why action only in April  Madras High Court questions Centre on covid second wave
Author
Chennai, First Published Apr 29, 2021, 6:56 PM IST

கொரோனா பரவலை தடுக்க கடந்த 14 மாதங்களாக மத்திய அரசு என்ன செய்து கொண்டிருந்தது என சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், ஆக்சிஜன் வேறு மாநிலத்துக்கு திருப்பி அனுப்புவது, ரெம்டெசிவிர் மருந்து, தடுப்பூசி  பற்றாக்குறை தொடர்பான பத்திரிகை செய்தியின் அடிப்படையில் சென்னை உயர் நீதிமன்றம் தாமாக முன் வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்டது. லையில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது மே 2ம் தேதி வாக்கு எண்ணிக்கையின் போது எடுக்கப்பட்டுள்ள கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும், மே 1ம் தேதி முழு ஊரடங்கு பிறப்பிக்க இயலாததற்கான காரணம் குறித்தும் தமிழக அரசு விளக்கமளித்தது. 

Why action only in April  Madras High Court questions Centre on covid second wave

அதனைத் தொடர்ந்து மத்திய அரசு மேற்கொண்டு வரும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து தலைமை நீதிபதி சஞ்சிவ் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வில் எடுத்துரைக்கப்பட்டது. அப்போது மத்திய அரசுத்தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் சங்கரநாராயணன், கொரோனா பரவலை தடுக்க எடுத்த நடவடிக்கைகளை பட்டியலிட்டார். அப்போது அவர், இரண்டாவது அலை என்பது எதிர்பாராதது எனக் குறிப்பிட்டார்.

Why action only in April  Madras High Court questions Centre on covid second wave

மேலும் தடுப்பூசி தயாரிப்பை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும், செங்கல்பட்டியில் உள்ள தடுப்பூசி உற்பத்தி மையத்தை செயல்படுத்த டெண்டர் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், போர்கால அடிப்படையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் மத்திய அரசு தரப்பு வழக்கறிஞர் தெரிவித்தார். 

Why action only in April  Madras High Court questions Centre on covid second wave

அப்போது தலையிட்ட தலைமை நீதிபதி, கடந்த 14 மாதங்களாக மத்திய அரசு என்ன செய்து கொண்டிருந்தது எனவும், இரண்டாவது அலை தீவிரமாகியுள்ள தற்போதைய நிலையில் நடவடிக்கைகளை துரிதப்படுத்தியது குறித்தும் கேள்வி எழுப்பினார்.கொரோனாவை தடுக்க நிபுணர்கள் ஆலோசனைகளைப் பெற்று,  திட்டமிட்டு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என அறிவுறுத்திய நீதிபதிகள், கொரோனா பேரிடரின் போது, அவ்வப்போதைக்கு ஏற்றவாறு நடவடிக்கைகளை எடுக்க கூடாது எனவும் அறிவுறுத்தினர்.

Follow Us:
Download App:
  • android
  • ios