எந்தெந்த நிறுவனத்தில் எவ்வளவு விலைக்கு மது வாங்குறீங்க! விவரங்களை கொடுங்க! டாஸ்மாக் நிர்வாகத்துக்கு உத்தரவு.!

கடந்த 2015ம் ஆண்டு கோவையைச் சேர்ந்த வழக்கறிஞர் லோகநாதன் என்பவர் டாஸ்மாக்கில் மதுபானம் விற்பனை மூலம் அரசுக்கு கிடைத்த வருமானம், ஊழியர்களுக்கான சம்பளம், கடை வாடகை உள்ளிட்ட செலவுகள், மது உற்பத்தி நிறுவனங்களிடம் இருந்து எவ்வளவு மதுபானங்கள், என்ன விலைக்கு கொள்முதல் செய்யப்படுகின்றன உள்ளிட்ட விவரங்கள் கேட்டு தகவல் உரிமைச் சட்டத்தின் கீழ், கடந்த 2015-ம் ஆண்டு விண்ணப்பித்திருந்தார்.

Which company and at what price are you buying alcohol? Chennai High Court orders Tamil Nadu government to provide details

டாஸ்மாக்குக்கு எந்தெந்த நிறுவனங்களிடம் இருந்து, எவ்வளவு விலைக்கு மதுபானங்கள் கொள்முதல் செய்யப்படுகின்றன என்ற விவரங்களை தெரிவிக்க வேண்டும் என டாஸ்மாக் நிர்வாகத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2015ம் ஆண்டு கோவையைச் சேர்ந்த வழக்கறிஞர் லோகநாதன் என்பவர் டாஸ்மாக்கில் மதுபானம் விற்பனை மூலம் அரசுக்கு கிடைத்த வருமானம், ஊழியர்களுக்கான சம்பளம், கடை வாடகை உள்ளிட்ட செலவுகள், மது உற்பத்தி நிறுவனங்களிடம் இருந்து எவ்வளவு மதுபானங்கள், என்ன விலைக்கு கொள்முதல் செய்யப்படுகின்றன உள்ளிட்ட விவரங்கள் கேட்டு தகவல் உரிமைச் சட்டத்தின் கீழ், கடந்த 2015-ம் ஆண்டு விண்ணப்பித்திருந்தார்.

இதையும் படிங்க;- காசு ஆசைப்பட்டு குடிகாரனுங்களுக்கு பொண்ணுங்கள கட்டிக் கொடுக்காதிங்க.. தலையில் அடித்து கொண்டு கதறும் ராமதாஸ்.!

Which company and at what price are you buying alcohol? Chennai High Court orders Tamil Nadu government to provide details

மதுபான விற்பனை மூலம் கிடைத்த வருமானம், ஊழியர் சம்பளம் உள்ளிட்ட செலவுகள் குறித்த விவரங்களை வழங்கிய டாஸ்மாக் நிர்வாகம், மூன்றாம் நபரின் வர்த்தகம் சம்பந்தப்பட்ட விவரங்களை வெளியிட முடியாது எனக் கூறி, எந்தெந்த நிறுவனங்களிடம், எவ்வளவு விலைக்கு மதுபானங்கள் கொள்முதல் செய்யப்படுகின்றன என்ற விவரங்களை வழங்க மறுத்துவிட்டது. இதை எதிர்த்து லோகநாதன் கடந்த 2017-ம் ஆண்டு மீண்டும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி மதுபான கொள்முதல் தொடர்பான விவரங்களை பொதுவெளியில் வெளியிடக் கூடாது என்பதற்கு காரணங்கள் ஏதேனும் இருக்கிறதா? மதுபானங்கள் கொள்முதல் நிறுவனங்களுடன் செய்து கொண்ட ஒப்பந்தங்களின் நகல்களை தாக்கல் செய்ய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்த வழக்கு நீதிபதி அனிதா சுமந்த் முன் மீண்டும் விசாரணைக்கு வந்த போது, அந்த விவரங்கள் சமர்ப்பிக்கப்படவில்லை.

Which company and at what price are you buying alcohol? Chennai High Court orders Tamil Nadu government to provide details

இதையடுத்து, ஏற்கெனவே பிறப்பித்த உத்தரவை அமல்படுத்தாத டாஸ்மாக் நிர்வாகத்துக்கு 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்த நீதிபதி, அத்தொகையை அடையாறு புற்றுநோய் மருத்துவமனைக்கு வழங்க உத்தரவிட்டார். எந்தெந்த மது உற்பத்தி நிறுவனங்களிடம் இருந்து, என்ன விலைக்கு மதுபானங்கள் கொள்முதல் செய்யப்படுகின்றன, மதுபான உற்பத்தி நிறுவனங்களுடன் செய்து கொண்ட ஒப்பந்த நகல்களை சீல் வைக்கப்பட்ட கவரில் ஜனவரி 6-ம் தேதி சமர்ப்பிக்க வேண்டும் என டாஸ்மாக் நிர்வாகத்துக்கு உத்தரவிட்டு, விசாரணையை ஒத்திவைத்தி வைக்கப்பட்டது.

இதையும் படிங்க;-  குடிமகன்களுக்கு அதிர்ச்சி செய்தி! டாஸ்மாக்கை மூடும் நேரத்தில் மாற்றமா? தமிழக அரசுக்கு ஐகோர்ட் அதிரடி உத்தரவு.!

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios