தமிழகத்தில் கொரோனா பாதிப்பின் நிலவரம் என்ன? அமைச்சர் மா.சுப்பிரமணியன் பரபரப்பு தகவல்..!
குட்கா, பான்மசாலா போன்ற தடை செய்யப்பட்ட பொருட்கள் எங்கு விற்பனை செய்யப்படுகிறது என தெரிந்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும். இதுகுறித்து தகவல் தெரிவிப்பவர்களின் ரகசியம் காக்கப்படும்.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறித்து மக்கள் யாரும் அச்சப்பட வேண்டாம் என சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்;- கடந்த சில நாட்களாக அதிகரித்து வந்த கொரோனா பாதிப்பு படிப்படியாக குறைய தொடங்கியுள்ளது. தொற்று பரவலை தடுக்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. மருத்துவ வசதிகள் தயார் நிலையில் உள்ளது.
இதையும் படிங்க;- முதல்வரை ஏமாற்றிய போலி வீல் சேர் இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் மீது வழக்குப் பதிவு.. எப்படி தெரியுமா?
கொரோனா பாதிப்பு குறித்து மக்கள் யாரும் அச்சப்பட தேவையில்லை. குட்கா உள்ளிட்ட புகையிலை பொருட்களுக்கு தடை தொடர்பாக மாவட்ட சுகாதார அலுவர்களுடன் நாளை ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் முக்கிய ஆலோசானை மேற்கொள்ளப்பட உள்ளதாக தெரிவித்தார்.
குட்கா, பான்மசாலா, புகையிலை பொருட்கள் மீதான தடை தொடர்கிறது. குட்கா, பான்மசாலா போன்ற தடை செய்யப்பட்ட பொருட்கள் எங்கு விற்பனை செய்யப்படுகிறது என தெரிந்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும். இதுகுறித்து தகவல் தெரிவிப்பவர்களின் ரகசியம் காக்கப்படும். இந்த தடையை மீறி விற்பனை செய்வோர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் எச்சரித்துள்ளார்.
இதையும் படிங்க;- ஓ.. இதுக்குதான்.. 8 மணி நேரம் டூ 12 மணி நேரம் வேலை நாடகமா? உண்மையை அம்பலப்படுத்தும் பாஜக பிரமுகர்..!