3 டோஸ் தடுப்பூசி போட்ட பிறகு மாஸ்க் எதற்கு? வாக்குவாதம்.. DSP என தெரிந்ததும் போலீசார் அதிர்ச்சி..!
3 டோஸ் கொரோனா தடுப்பூசி போட்டு கொண்டதால் மூகக்கவசம் அணியமாட்டேன் என சென்னையில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்த போலீசாரிடம் சாதாரண உடையில் இருந்த டிஎஸ்பி வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
3 டோஸ் கொரோனா தடுப்பூசி போட்டு கொண்டதால் மூகக்கவசம் அணியமாட்டேன் என சென்னையில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்த போலீசாரிடம் சாதாரண உடையில் இருந்த டிஎஸ்பி வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் கொரோனா பரவல் கட்டுக்கடங்காத வேகத்தில் பரவி வருகிறது. தினசரி பாதிப்பு 30,000 தாண்டியுள்ளது. அதேநேரத்தில் உயிரிழப்பு எண்ணிக்கையும் கணிசமாக உயர்ந்து வருகிறது. இந்நிலையில், தமிழகத்தில் முகக்கவசம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் முக்கவசம் அணியாமல் வெளியில் சுற்றுபவர்கள் மீதும் கொரோனா ஊரடங்கு விதிமுறைகளை மீறி சுற்றுபவர்கள் மீதும் அபராதம், வாகனம் பறிமுதல் உள்ளிட்ட நடவடிக்கைகளை போலீசார் எடுத்து வருகின்றனர்.
அந்த வகையில் சென்னை அண்ணாநகரில் நேற்று போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, முகக்கவசம் அணியாமல் இருசக்கர வாகனத்தில் வந்த ஒருவரை நிறுத்தி அபராதம் செலுத்துமாறு கூறினர். அப்போது, அந்த நபர் 3 டோஸ் தடுப்பூசி செலுத்திவிட்டதாகவும், அதன் பிறகு எதற்கு முகக்கவசம் அணிய வேண்டும் கேட்டு போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். தொடர்ந்து முகக்கவசம் அணியாமல் வந்ததற்காக அவர் மீது வழக்குப்பதிவு செய்து அவரது இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்தனர்.
அப்போது தான் தஞ்சாவூர் போலீஸ் பயிற்சி கல்லூரியில் டி.எஸ்.பி.யாக இருக்கும் சபாபதி என்பவர், சென்னையில் உள்ள உறவினர் வீட்டிற்கு வந்துள்ளார் என்பது தெரியவந்தது. காவல்துறையில் உயர் பொறுப்பில் இருந்து கொண்டு முகக்கவசம் அணியாததுடன், பணியில் உள்ள சக காவலர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.