Asianet News TamilAsianet News Tamil

நீட் தேர்வை நடத்தியே தீருவோம்… - இல.கணேசன் திட்டவட்டம்.

நீட் தேர்லை நடத்தியே தீருவோம் என தமிழக பாஜக மூத்த தலைவரும், பாஜக ராஜ்யசபா எம்பியுமான இல.கணேசன் திட்டவட்டமாக கூறினார்.

We will make the selection of the neet exam ila.ganesan
Author
Chennai, First Published Jul 11, 2019, 10:35 AM IST

நீட் தேர்லை நடத்தியே தீருவோம் என தமிழக பாஜக மூத்த தலைவரும், பாஜக ராஜ்யசபா எம்பியுமான இல.கணேசன் திட்டவட்டமாக கூறினார்.

கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் நீட் தேர்வை மத்திய அரசு அறிவித்தது. அப்போதைய முதல்வராக இருந்த ஜெயலலிதா, இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தார். மேலும், தமிழகத்தில் நீட் தேர்வு நடத்தக் கூடாது என மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவித்தார்.

We will make the selection of the neet exam ila.ganesan

ஆனால், ஜெயலலிதாவின் மறைவுக்கு பின், பதவியில் மாற்றம் ஏற்பட்ட பின்னர், தமிழகத்தில் நீட் தேர்வு நடத்தப்பட்டது. மேலும், உச்சநீதிமன்றமும் அதற்கு உத்தரவிட்டது.

இந்தவேளையில், மாணவி அனிதா, நீட்தேர்வில் தோல்வி அடைந்ததால், தனது மருத்துவர் கனவு தகர்ந்தது. இதனால் அவர் தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியது. இதேபோல், சென்னை உள்பட சில இடங்களிலும் மாணவிகள் தற்கொலை செய்து கொண்டனர்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள, தமிழகத்தில் உள்ள அனைத்து கட்சியினரும், நீட் தேர்வு நடத்துவதற்கு, கண்டன குரல் எழுப்பி வருகின்றனர்.

We will make the selection of the neet exam ila.ganesan

இந்நிலையில், தமிழக பாஜகவின் மூத்த தலைவரும், ராஜ்யசபா எம்பியுமான இல.கணேசன், தமிழகத்தில் நீட் தேர்வு நடத்தியே தீருவோம் என செய்தியாளர்கள் சந்திப்பில் கூறினர்.

இதுகுறித்து, இல.கணேசன் கூறியதாவது: தற்கொலைகளை காரணம் காட்டி நீட் தேர்வை ரத்து செய்ய சொல்வது ஏற்க முடியாது. நீட் தேர்வை பாஜக ஆதரிக்கிறது. நீட் தேர்வு நிச்சயம் நடந்தே தீரும். இதனால், ஏழை மாணவர்கள் பயன்பெறுவார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

Follow Us:
Download App:
  • android
  • ios