அடுக்குமாடி குடியிருப்புகள் , ஐ.டி நிறுவங்கள் , விடுதிகள் , வீடுகளுக்கு சென்னை போன்ற பெருநகரங்களில் தண்ணீர் லாரிகள் மூலம் கொண்டு செல்லப்படுகிறது . இதற்காக தனியார் இடங்களிலும் , விவசாய கிணறுகளிலும் தண்ணீர் எடுத்து வந்தனர் .

இதனை முறைப்படுத்தி உயர்நீதிமன்ற வழிகாட்டுதல்படி தமிழக அரசு சில நிபந்தனைகளை விதித்தது . அதில் பல நிபந்தனைகளால் தனியார் தண்ணீர் லாரி ஓட்டுனர்கள் பாதிக்கப்படுவதாக கூறி கடந்த 6 மாதங்களுக்கு முன்னர் போராட்டம் நடத்தினர் . அரசு பேச்சுவார்த்தை நடத்திய பிறகு போராட்டம் கைவிடப்பட்டது .

இந்த நிலையில் தண்ணீர் லாரிகள் சிறைபிடிக்கபடுவதை கண்டித்தும் , லாரி ஓட்டுனர்கள் மீது திருட்டு வழக்குகளை காவல்துறை பதிவு செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாநிலம் முழுவதும் தண்ணீர் லாரி உரிமையாளர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர் .

இதனால் அடுக்குமாடி குடியிருப்புகள் , ஐ.டி  நிறுவனங்கள் போன்றவை தண்ணீர் தட்டுப்பாட்டில் சிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது . இதுகுறித்து அரசு , தனியார் தண்ணீர் லாரி உரிமையாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்த இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது .