Asianet News TamilAsianet News Tamil

பதைபதைக்க வைக்கும் காட்சி... தந்தை கண்முன்னே ஒரு வயது குழந்தை உடல்நசுங்கி உயிரிழப்பு..!

சென்னையில் தந்தையின் கண்முன்னே ஒரு வயது குழந்தை உடல்நசுங்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது. இது தொடர்பாக போலீசார் விசாரணையில் குடித்துவிட்டு லாரி ஓட்டியதே விபத்து காரணம் என்று போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. 

Water truck accident...one age child dead
Author
Tamil Nadu, First Published Aug 3, 2019, 11:08 AM IST

சென்னையில் தந்தையின் கண்முன்னே ஒரு வயது குழந்தை உடல்நசுங்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது. இது தொடர்பாக போலீசார் விசாரணையில் குடித்துவிட்டு லாரி ஓட்டியதே விபத்து காரணம் என்று போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. 

சென்னை குன்றத்தூர் ஓவியர் தெருவை சேர்ந்தவர் ராஜாராம் (30). பிளம்பர். இவரது மனைவி சிந்து (24). தம்பதியின் மகள் கனிஷ்கா (4), மகன் சர்வேஸ்வரன் (1). நேற்று குழந்தைக்கு ஆதார் அட்டை எடுப்பதற்காக ராஜாராம் தனது மனைவி மற்றும் 2 குழந்தைகளுடன் இருசக்கர வாகனத்தில் பம்மல் மெயின் ரோடு சென்று கொண்டிருந்தார். அப்போது, எதிரே அசுரவேகத்தில் வந்த தண்ணீர் லாரி  ராஜாராம் இருசக்கர வாகனம் மீது மோதியது.

 Water truck accident...one age child dead

இதில், 4 பேரும் தூக்கி வீசப்பட்டனர். இதில் ஒரு வயது குழந்தை சர்வேஸ்வரன் மீது லாரி சக்கரம் ஏறி இறங்கியதில் சம்பவ இடத்திலேயே குழந்தை உயிரிழந்தது. சிந்துவின் இடுப்பு பகுதியில் லாரியின் பின் சக்கரம் ஏறி இறங்கியதில் படுகாயமடைந்தார். ராஜாராம், மகளும் சிறு காயங்களுடன் உயிர் தப்பினர். இதை கண்ட பொதுமக்கள், லாரி ஓட்டுரை மடக்கி பிடித்து  தர்ம அடி கொடுத்தனர். Water truck accident...one age child dead

உடனே விபத்து தொடர்பாக போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் ஆம்புலன்ஸ் மூலம் குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு உயிருக்கு ஆபத்தான நிலையில் சந்து சிகிச்சை பெற்று வருகிறார். இது தொடர்பாக லாரி ஓட்டுநரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். Water truck accident...one age child dead

கடந்த சில மாதங்களாகவே தண்ணீர் லாரிகள் அதிவேகமாக இயக்குவதால் விபத்து அதிகரித்து வருகிறது. இது தொடர்பாக காவல் துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.  

Follow Us:
Download App:
  • android
  • ios