கடவுள்களில் முதன்மையானவராக, வழிபாடுகளில் முதல் பூஜை ஏற்பவராக மக்களால் வணங்கப்படுபவர் ஆனை முகம் கொண்ட விநாயகர். கோவில்கள் மட்டுமின்றி அரசமர நிழலிலும் ஆற்றங்கரையோரங்களிலும் அமர்ந்து அருள்பாலித்து கொண்டிருப்பவர். 

இந்தியா மற்றும் நேபாள நாட்டில் விநாயகர் வழிபாடு நிறைந்து காணப்படுகிறது. ஆவணி மாதத்தில் வரும் தேய்பிறை சதுர்த்தி விநாயகர் சதுர்த்தி விழாவாக இந்து மக்களால் உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. 

விநாயகர் சதுர்த்தி விழா 10 நாட்களுக்கு முன்னரே கோலாகலமாக தொடங்கி விடும். பல்வேறு இடங்களில் பொதுமக்கள் விநாயகர் சிலைகள் அமைத்து வழிபாடு செய்வார்கள். கோவிகளில் விநாயகருக்கு சிறப்பு பூஜைகள் நடைபெறும். விநாயகர் சதுர்த்தியன்று, வசதிபடைத்தவர்கள் மட்டுமின்றி எல்லோரும் தங்கள் வசதிக்கேற்ப உயரமான விநாயகர் சிலைகளை செய்து, தங்கள் பகுதி மக்கள் சேர்ந்து கொண்டாடும் விழாவாக நடத்துவார்கள்.

பக்தர்களால் அமைக்கப்படும் விநாயகர் சிலைகளுக்கு 1 வாரம் பூஜை நடத்திய பின்னர் ஊர்வலமாக கொண்டுவரப்பட்டு ஆறுகள், குளங்கள், மற்றும் கடலில் கரைக்க பட்டு விநாயகர் சதுர்த்தி விழா நிறைவு பெறும்.

இந்த ஆண்டு இந்த விழா செப்டம்பர் 2 (திங்கள் கிழமை) இன்று வருகிறது. அரசு விடுமுறையான இன்று கோவில்கள் மற்றும் விநாயகர் சிலை அமைக்கப்பட்ட இடங்களில் மக்கள் கூட்டம் நிறைந்து காணப்படுகிறது .