Asianet News TamilAsianet News Tamil

அள்ள, அள்ள தங்கம்…… வசமாய் சிக்கிய மாசுக் கட்டுப்பாட்டு வாரியத் தலைவர் வெங்கடாசலம்..!

தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியத் தலைவர் வெங்கடாசலத்தின் வீடுகளில் அள்ள, அள்ள கிலோ கணக்கில் தங்கம் சிக்கியுள்ளது.

Vigilance raid - 3 kg gold, money siezed
Author
Chennai, First Published Sep 24, 2021, 5:47 PM IST

தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியத் தலைவர் வெங்கடாசலத்தின் வீடுகளில் அள்ள, அள்ள கிலோ கணக்கில் தங்கம் சிக்கியுள்ளது.

தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைவராக உள்ள வெங்கடாசலம், பல்வேறு வழிகளில் லஞ்சம் பெற்று சொத்துகளை வாங்கிக் குவித்ததாக புகார் எழுந்தது. அதன் அடிப்படையில் சென்னையில் உள்ள வெங்கடாசலத்தின் வீடு மற்றும் அவர் பணிபுரியும் அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸார் நேற்று அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

Vigilance raid - 3 kg gold, money siezed

இதேபோல் வெங்கடாசலத்தின் சொந்த ஊரான சேலத்தில் உள்ள அவரது வீடு, பண்ணையிலும் லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். சேலத்தில் நேற்றிரவு வரை நடைபெற்ற சோதனையில் ரூ.13.5 லட்சம் ரொக்கப்பணம், 8 கிலோ தங்கம், 10 கிலோ சந்தனப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

Vigilance raid - 3 kg gold, money siezed

இந்தநிலையில் சென்னை, சேலம் ஆகிய இடங்களில் நடைபெற்ற சோதனையின் முடிவில் மேலும் 3 கிலோ தங்கத்தை லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்தது தொடர்பாக வெங்கடாசலம் மீது லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸார் முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்துள்ளனர். பல கோடி ரூபாய் மதிப்பிலான சொத்து ஆவணங்களும் கைப்பற்றப்பட்டுள்ளது. அள்ள, அள்ள பணமும், தங்கமும் சிக்குவதால் வெங்கடாசலத்தின் வங்கி லாக்கரை திறந்து சோதனையிடவும் லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் முடிவு செய்துள்ளனர்.

Follow Us:
Download App:
  • android
  • ios