Asianet News TamilAsianet News Tamil

புறநகர் ரயிலில் பயணிக்க தடுப்பூசி கட்டாயம்.. புதிய கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்தது.. என்னென்ன தெரியுமா?

கொரோனா மூன்றாவது அலை பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் தமிழக அரசு புதிய நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன்படி, வழக்கமான பயணிகளைப் போல் சீசன் டிக்கெட் எடுத்துப் புறநகர் ரயில்களில் பயணிப்போரும் இன்று முதல் தடுப்பூசி இரண்டு டோஸும் செலுத்திய சான்றிதழை வைத்திருக்க வேண்டும். 

Vaccination is mandatory to travel on the suburban train
Author
Chennai, First Published Jan 10, 2022, 9:43 AM IST

சென்னை புறநகர் ரயில்களில் பயணிக்க இன்று முதல் புதிய கட்டுப்பாடுகள் அமலாகியுள்ளது.  2 டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்தியிருந்தால் மட்டுமே புறநகர் ரயிலில் பயணம் செய்ய அனுமதிப்படுவர் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. 

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த கடந்த 6-ம் தேதி முதல் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கொரோனா பரவல் காரணமாக  சென்னை புறநகர் ரயில்களில் 2 டோஸ் தடுப்பூசி செலுத்தியவர்கள் மட்டுமே இன்று முதல் பயணம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Vaccination is mandatory to travel on the suburban train

இது தொடர்பாக தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்;- கொரோனா மூன்றாவது அலை பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் தமிழக அரசு புதிய நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன்படி, வழக்கமான பயணிகளைப் போல் சீசன் டிக்கெட் எடுத்துப் புறநகர் ரயில்களில் பயணிப்போரும் இன்று முதல் தடுப்பூசி இரண்டு டோஸும் செலுத்திய சான்றிதழை வைத்திருக்க வேண்டும். 

புறநகர் ரயில்களில் பயணிக்கும் சாதாரணப் பயணிகளின் டிக்கெட்டில் கோவிட் தடுப்பூசி சான்றிதழலில் உள்ள 12 இலக்கு எண் அச்சிடப்படும், அதேபோல் சீசன் டிக்கெட் எடுப்போரின் டிக்கெட்டில் 4 இலக்கு கோவிட் சான்றிதழ் எண் பதிவு செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Vaccination is mandatory to travel on the suburban train

சீசன் டிக்கெட்டை புதுப்பிக்கும் போது அதே எண் மீண்டும் அச்சிடப்படும். இதன் நிமித்தமாக ரயில்வே நிர்வாகத்துக்கு சென்னை புறநகர் பயணிகள் ஒத்துழைக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. இதுதவிர பயணிகள் முகக்கவசம் அணிவது கட்டாயம். முக கவசம் அணியாத ரயில் பயணிகளுக்கு ரூ.500 அபராதம் விதிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. UTS செயலி மூலம் முன்பதிவு செய்யும் வசதி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது என தெற்கு ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Follow Us:
Download App:
  • android
  • ios