தமிழக அரசு நடத்தும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் செயல்படும் மருந்தகங்களில் மருந்து விநியோகிப்பாளர் அல்லது மருந்து வழங்குபவர் என்ற பணிக்கு தற்காலிக ஆள்சேர்ப்புக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

பணி: மருந்து விநியோகிப்பாளர் அல்லது மருந்து வழங்குபவர் 

மொத்த காலியிடங்கள் = 405 

வயது வரம்பு: 
குறைந்தபட்சமாக, 18 வயது நிரம்பியவராகவும் அதிகபட்சமாக 57 வயது வரை  (01.07.2019 அன்றுக்குள்)

கல்வித்தகுதி:
டிப்ளமா இன் பார்மஸி (சித்தா / யுனானி / ஆயுர்வேதா / ஹோமியோபதி) அல்லது தமிழக அரசால்நடத்தப்படும் டிப்ளமா இன் இண்டகிரேடட் பார்மஸி என்ற படிப்பை முடித்திருக்க வேண்டும்.

ஊதியம்:
நாளொன்றுக்கு ரூ.750 (வாரத்தில் 6 நாட்கள்)
வழங்கப்படும். தினமும் 6 மணி நேரம் பணியாற்ற வேண்டும்.

முக்கிய தேதிகள்: 
அறிவிப்பாணை வெளியான தேதி: 31.08.2019 
விண்ணப்பிக்க தொடங்கும் நாள்: 31.8.2019 
பூர்த்தி செய்த விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 20.09.2019, மாலை 5.00 மணி வரை

விண்ணப்பிக்கும் முறை:

தமிழக சுகாதாரத்துறையின் http://www.tnhealth.org/ - என்ற இணையதள முகவரியில் சென்று விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்ய வேண்டும்.  பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் செப்டம்பர் 20 ம் தேதி மாலை 5 மணிக்குள் கீழ்கண்ட முகவரிக்கு அனுப்பப்பட வேண்டும்.

முகவரி:
இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதித் துறை இயக்குநர்,
அறிஞர் அண்ணா அரசினர் இந்திய மருத்துமனை வளாகம்,
அரும்பாக்கம்,
சென்னை - 600 016.

மேலும் விபரங்களுக்கு http://www.tnhealth.org என்ற இணையதள முகவரியில் தெரிந்து கொள்ளலாம்.