சென்னையில் ரோந்து பணியில் ஈடுபட்ட எஸ்ஐயின் மூக்கை உடைத்த கஞ்சா ஆசாமிகள்; போலீஸ் வலை வீச்சு
சென்னை ஆர்.கே.நகர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த காவல் உதவி ஆய்வாளரை கடுமையாக தாக்கிய கஞ்சா ஆசாமிகளை காவல் துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.
சென்னை ஆர் கே நகர் காவல் நிலையத்தில் குற்றப்பிரிவு உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வருபவர் பாலமுருகன். இந்த நிலையில் பாலமுருகன் சாதாரண உடையில் தனது 'TN.01.G.6332'இருசக்கர வாகனத்தில் சம்பவ இடத்தில் ரோந்து அலுவலகத்தில் இருந்த பொழுது அங்கே சந்தேகம் படும்படியாக இருந்த 5 நபர்களை விசாரணை செய்து கொண்டிருந்தார். அப்போது அதில் ஒரு நபர் கஞ்சா போதையிலும், மற்றவர்கள் குடிபோதையிலும் இருந்ததாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில் இவர்கள் திடீரென உதவி ஆய்வாளர் பாலமுருகனை ஒருமையில் திட்டியதாகவும், உதவி ஆய்வாளர் முகத்தில் சரமாரியாக தாக்கியதாகவும் கூறப்படுகிறது. உதவி ஆய்வாளரை சரமாரியாக தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பித்துச் சென்றுவிட்டனர். இந்த சம்பவம் அறிந்து அங்கு சென்ற சக காவலர்கள் காவல் உதவி ஆய்வாளரை மீட்டு அருகில் இருக்கக்கூடிய தனியார் மருத்துவமனையில் அனுமதித்த நிலையில், அவர் முகம், கை, மூக்கு உள்ளிட்ட பகுதிகளில் எலும்பு முறிவு ஏற்பட்டு உடல் முழுவதும் பலத்த காயங்கள் ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
பூ பறிக்கச் சென்ற சிறுமி பாலியல் வன்கொடுமை; கர்ப்பத்தால் பிடிபட்ட முதியவர்
இந்த சம்பவம் தொடர்பாக ஆர்கே நகர் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து காவல் உதவி ஆய்வாளர் பாலமுருகனை தாக்கிய மர்ம நபர்களை சிசிடிவி காட்சிகளை வைத்து தேடி வருகிறார்கள். மக்கள் அதிக நெருக்கடியான வைத்தியநாதன் பாலம் அருகே காவல் உதவி ஆய்வாளர் மீது தாக்குதல் நடைபெற்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.