சென்னையில் பிரபல தனியார் தொலைக்காட்சி சேனலில் 28 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

கொரோனா வைரஸ் நோய் தொற்றுக்கு பரவல் தடுப்புக்காக நாடு முழுவதும் கடந்த 24ம் தேதி மாலை முதல் ஏப்ரல் 14 வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. பின்னர் மே 3ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டலாம் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. இந்நிலையில், தமிழகத்தில் கொரோனா ஊரடங்கால் பயந்து மக்கள் அனைவரும் வீட்டிக்குள்ளே  முடங்கியுள்ளனர். ஆனால், மருத்துவர்கள், செவிலியர்கள், காவல் துறையினர் மற்றும் பத்திரிகையாளர்கள் தனது உயிரை பணயம் வைத்து சுயநலமின்றி பொதுநலத்துடன் பணியாற்றி வருகின்றனர். 

இந்நிலையில், செய்தியை முந்தி தர வேண்டும் என்ற ஆர்வத்தால் செய்தியாளர்களில் பலர் சமூக விலகலை கடைப்பிடிக்காமல் இருந்து வந்தனர். அதன் விளைவாக இப்போது பலருக்கும் கொரோனா பாதிப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. முதலில் தொலைக்காட்சியில் பணியாற்றும் ஒருவருக்கும், நாளிதழில் பணியாற்றும் ஒருவருக்கும் கொரோனா தொற்று இருப்பது சோதனையில் தெரிய வந்தது. இதனையடுத்து இருவரும் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

இதனையடுத்து, அந்த நிறுவனத்தில் பணிபுரியும் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை  செய்யப்பட்டது. அதில்,  26 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுதையடுத்து, அவர்கள் அரசு மருத்துவமனையில் தனிவார்டில்  அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  இதனையடுத்து, சென்னையில் ஊடகத்துறையில் பணியாற்றும் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்ய வேண்டும் என அரசுக்கு வலியுறுத்தியுள்ளனர்.