சென்னை வாகன ஓட்டிகள் முக்கிய அறிவிப்பு.. இன்றும் நாளையும் போக்குவரத்து மாற்றம்..!
ஜிஎஸ்டி சாலை விமான நிலையத்திலிருந்து கிண்டி நோக்கி செல்லும் வாகனங்கள் கத்திபாரா பாலத்தில் மேலே சென்று கிண்டி போகும் வழியில் எவ்வித மாற்றமும் இன்றி சென்றடையலாம்.
பரங்கிமலை பகுதியில் உள்ள ஜிஎஸ்டி சாலையில் மழைநீர் வடிகால் அமைக்கும் பணி நடைபெறுவதால் இன்று முதல் நாளை வரை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து சென்னை போக்குவரத்து போலீசார் வெளியிட்டுள்ள அறிக்கையில்;- சென்னை மாநகர தெற்கு போக்குவரத்து காவல் மாவட்டத்தில் உள்ள பரங்கிமலை பகுதியில் நிரந்தர மழைநீர் வடிகால் அமைக்கும் பணி நடைபெற இருப்பதால், 25ம் தேதி முதல் 26ம் தேதி வரை இரவு 11 மணி முதல் காலை 5 மணிவரை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
* ஜிஎஸ்டி சாலை விமான நிலையத்திலிருந்து கிண்டி நோக்கி செல்லும் வாகனங்கள் கத்திபாரா பாலத்தில் மேலே சென்று கிண்டி போகும் வழியில் எவ்வித மாற்றமும் இன்றி சென்றடையலாம்.
* பூந்தமல்லியில் இருந்து வரும் வாகனங்கள் மாற்றம் எதும் இன்றி வழக்கமான சாலையில் (கத்திபாரா வழியாக) செல்லலாம்.
* வடபழனியில் இருந்து வரும் வாகனங்கள் தண்டுமா நகர் ‘யூ’வளைவு எடுத்து சிப்பெட் சந்திப்பில் வலதுபுறம் திருப்பி திரு.வி.க.தொழிற்பேட்டை சாலை வழியாக கிண்டி பேருந்து நிலையம் வந்து அண்ணாசாலை சென்றடையலாம்.
* வடபழனியிலிருந்து வரும் வாகனங்கள் 100 அடி சாலையில் இடது புறமாக திருப்பி திரு.வி.க.தொழிற்பேட்டை சாலை வழியாக கிண்டி பேருந்து நிலையம் வந்து அண்ணாசாலை சென்றடையலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க;- கிரிக்கெட் மட்டையால் மண்டையை பொளந்து கொலை.. தற்கொலை செய்ததாக நாடகமாடிய கணவன் சிக்கியது எப்படி? பரபரப்பு தகவல்