கிரிக்கெட் மட்டையால் மண்டையை பொளந்து கொலை.. தற்கொலை செய்ததாக நாடகமாடிய கணவன் சிக்கியது எப்படி? பரபரப்பு தகவல்

 கணவர், மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. கடந்த 10 நாட்களுக்கு முன்பு நடந்த தகராறில் கீர்த்திராஜ் மனைவியை தாக்கியதால் கோபித்துக்கொண்டு தாய் வீட்டிற்கு சென்றுவிட்டார். பின்னர்,  மனைவியை சமாதானம் செய்து திரும்ப வீட்டிற்கு அழைத்து சென்றார். 

salem woman engineer murder... Husband Arrest

சேலத்தில் பெண் இன்ஜினீயரை கிரிக்கெட் மட்டையால் அடித்து கொலை செய்து விட்டு தற்கொலை செய்து கொண்டதாக நாடமாடிய கணவனை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.

சேலம் மாவட்டம் சூரமங்கலம் முல்லை நகர் பகுதியை சேர்ந்தவர் தியாகலிங்கம். இவரது மனைவி ராஜலட்சுமி. இவர்களுக்கு தனஸ்ரீயா என்ற மகளும், ஒரு மகனும் உள்ளனர். இன்ஜினீயரான தனஸ்ரீயாயை அதே பகுதியை சேர்ந்த கீர்த்திராஜ்(31) என்பவருக்கு கடந்த 2019ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். கீர்த்திராஜ் கோவையில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார்.

salem woman engineer murder... Husband Arrest

இந்நிலையில், கணவர், மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. கடந்த 10 நாட்களுக்கு முன்பு நடந்த தகராறில் கீர்த்திராஜ் மனைவியை தாக்கியதால் கோபித்துக்கொண்டு தாய் வீட்டிற்கு சென்றுவிட்டார். பின்னர்,  மனைவியை சமாதானம் செய்து திரும்ப வீட்டிற்கு அழைத்து சென்றார். அன்றிரவை இரவு 10 மணி அளவில், தனஸ்ரீயா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக, தனஸ்ரீயாவின் பெற்றோர், உறவினர்களுக்கு தகவல் கொடுத்துள்ளனர். 

இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த பெற்றோர் மற்றும் உறவினர்கள் தனஸ்ரீயாவின் உடலில் காயம் இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். அறை முழுவதும் ரத்தமும் சிதறிக் கிடந்தது.  இதனையடுத்து, பெற்றோர் தனது மகளை அடித்து கொலை செய்துவிட்டதாக காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் தனஸ்ரீயாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

salem woman engineer murder... Husband Arrest

இதனையடுத்து, பிரேத பரிசோதனை அறிக்கையில் தனஸ்ரீயா கிரிக்கெட் மட்டையால் தாக்கப்பட்டு உயிரிழந்ததாக கூறப்பட்டது. இதையடுத்து சந்தேக மரணம் என பதிவு செய்யப்பட்ட வழக்கை கொலை வழக்காக மாற்றம் செய்தனர். தனஸ்ரீயாவை அடித்துக் கொலை செய்து தூக்கிட்டு தற்கொலை செய்ததாக கணவர் நாடகமாடியது விசாரணையில் தெரிய வந்தது. இதையடுத்து கணவர் கீர்த்திராஜை போலீசார் கைது செய்துள்ளனர்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios