நாளை தமிழகம் வரவுள்ள சீன அதிபர்  ஜி ஜின்பிகிற்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட உள்ள நிலையில்,  நாளை மாலை மாமல்லபுரம் கடற்கரைக் கோவிலில் நடைபெற உள்ள கலைநிகழ்ச்சியை பார்வையிடவும் அங்கு நடைபெற உள்ள விருந்தில் கலந்துகொள்ளவும்  நடிகர் ரஜினிகாந்த்திற்கு அழைப்பு விடுக்கப்படவுள்ளது.

இரண்டு நாள் சுற்றுப்பயணமாக சீனா அதிபர் ஜி ஜின்பிங் நாளை மாமல்லபுரம்  வரவுள்ளார் அவரை வரவேற்று இந்தியா சீனா இடையே முக்கிய ஒப்பந்தகள் குறித்து விவாதிக்க உள்ளார்.  அதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.  நாளை பகல் 1 மணிக்கு சென்னை விமான நிலையம் வரும் சீனா அதிபர் ஜி ஜின்பிங்கிற்கு தமிழ் கலாச்சாரப்படி வரவேற்பு அளிக்கப்படவுள்ளது.  அதைத்தொடர்ந்து பிற்பகல் 1:55 மணிக்கு, சென்னை நட்சத்திர ஓட்டலில் அவருக்கு உணவு அளிக்கப்பட உள்ளது.  சற்றுநேரம் ஹோட்டலில் ஓய்வெடுக்கும்  ஜி ஜின்பிங் மாலை 4:10 மணிக்கு மாமல்லபுரம் புறப்படுகிறார். மாலை 5 மணிக்கு அங்குள்ள அர்ஜுனன் தபசு பகுதியில்  ஜி ஜின்பிங் கை இந்திய பிரதமர் மோடி வரவேற்கிறார்.  பின்னர் சற்று நேரம்  ஜி ஜின்பிங்கிற்கு மோடி அர்ஜுனன் தபசு வரலாறு குறித்து விளக்குகிறார்.

 

பிறகு அங்கிருந்து நடந்து சென்றவாறு வெண்ணை திரட்டு  பாறையை  பார்வையிடுகின்றனர். மாலை 5:15 மணிக்கு ஐந்து ரதம் பகுதிக்கு சென்று அங்குள்ள சிற்பங்களை பார்வையிடுகின்றனர்.  அங்கு கலாஷேத்ரா கலை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன.  பின்னர் அங்கிருந்து மாலை 6 45 மணிக்கு கடற்கரைக் கோயில் அமைந்திருக்கும் பகுதிக்கு செல்லும் மோடி, ஜி ஜின்பிங்  இருவரும் இரவு 8 மணி வரை அங்குள்ள புல் தரையில் அமர்ந்து உணவு சாப்பிடுகின்றனர். இதனை அடுத்து  சென்னை திரும்பி மீண்டும் நட்சத்திர  ஹோட்டலில் தங்குகின்றனர்.  பின்னர் மீண்டும்  மறுநாள் சனிக்கிழமை காலை 9:45  மாமல்லபுரம் புறப்பட்டுச் செல்லும் அவர்கள் மாமல்லபுரத்தில் உள்ள ரிசார்ட்டில் காலை உணவு எடுத்துக்கொள்கின்றனர். பின்னர் அங்கேயே இரு நாட்டு தூதரக அதிகாரிகள் மட்டத்திலான பேச்சுவார்த்தை  பகல் 11:30  மணியளவில் நடைபெற உள்ளது. 

அது முடிந்த பின்னர் மதிய உணவை தலைவர்கள்  அங்கேயே அருந்துகின்றனர். பின்னர்  1:15 மணிக்கு புறப்பட்டு சென்னை வருகின்றனர். முன்னதாக நாளை மாலை ஆறு மணிக்கு மாமல்லபுரம் கடற்கரைக் கோயிலில் நடைபெற உள்ள கலை நிகழ்ச்சியை பிரதமர் மோடி மற்றும் சீனா அதிபர் ஜி ஜின்பிங்கும் ஒன்றாக அமர்ந்து  பார்க்க உள்ளனர். அந்த கலை நிகழ்ச்சியினை பார்க்க வருமாறு நடிகர் ரஜினிகாந்துக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. சீனா அதிபர் வரவேற்ப்பு நிகழ்ச்சியிலும், அவருக்கு கொடுக்கப்படும்  விருந்து நிகழ்ச்சியிலும் நடிகர் ரஜினிகாந்த்  கலந்து கொள்ள உள்ளார் என்பது குறிப்பிட தக்கது.