ஓணம் பண்டிகையை முன்னிட்டு சென்னை மாவட்டத்துக்கு நாளை உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

மலையாள மொழி பேசும் மக்களின் முக்கிய பண்டிகையான ஓணம் பண்டிகை நாளை கொண்டாடப்படுகிறது. ஆவணி மாதம் அஸ்தம் நாளில் தொடங்கி திருவோணம் வரை ஓணம் பண்டிகை 10 நாட்கள் கொண்டாடப்படுகிறது. கேரளா மட்டுமின்றி உலகம் முழுவதும் வசிக்கும் மலையாள மொழி பேசும் மக்கள் ஓணம் பண்டிகையை சிறப்பாக கொண்டாடி வருகின்றனர். பாதாள லோகத்தை ஆளும் மகாபலி சக்கரவர்த்தி ஓணம் திருநாளில் பூவுலகுக்கு வருவதாக ஐதீகம். எனவே மகாபலி மன்னனுக்கு அத்தப்பூ கோலமிட்டு, வீட்டை அலங்கரித்து கொண்டாடப்பட்டு வருகிறது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

கேரளாவில் மட்டுமின்றி, தமிழ்நாட்டிலும் நீலகிரி, கோவை, கன்னியாகுமரி போன்ற கேரள எல்லையோர மாவட்டங்களில் ஓணம் பண்டிகை சிறப்பாக கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் நீலகிரி, கோவை மாவட்டங்களில் நாளை ஓணம் பண்டிகையை ஒட்டி, உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

சர சரவென குறைந்த தக்காளி விலை.! கோயம்பேட்டில் ஒரு கிலோ தக்காளி, காய்கறிகளின் விலை என்ன தெரியுமா.?

அந்த வகையில் ஓணம் பண்டிகையை ஒட்டி சென்னை மாவட்டத்திற்கும் நாளை உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில்ஏராளமானமலையாளமொழிபேசும்மக்கள்வசிக்கின்றனர்இந்த நிலையில் ஓணம்பண்டிகையைமுன்னிட்டுமாவட்டஆட்சியர்அருணாவிடுமுறைஅறிவிப்பை வெளியிட்டுள்ளார். மேலும் செப்டம்பர் 2ஆம்தேதிபணிநாளாகசெயல்படும்எனசென்னைமாவட்டஆட்சியர்அறிவித்துள்ளார்.