Asianet News TamilAsianet News Tamil

மலிவான விலையில் இனி ரேஷன் கடைகளில் தக்காளி விற்பனை ..! – விலை பட்டியல் வெளியீடு

தக்காளி விலை தொடர் ஏற்றத்தையடுத்து, தமிழகத்திலுள்ள நகர்புற மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் குறிப்பிட்ட சில நியாயவிலை கடைகளில் மலிவான விலையில் காய்கறி, தக்காளி விற்பனை செய்யப்படும் தமிழ்நாடு அரசு அதிரடியாக அறிவித்துள்ளது

Tomato rate increase
Author
Chennai, First Published Nov 24, 2021, 7:30 PM IST

அதிக மழைபொழிவு மற்றும் குறைந்த விளைச்சல் காரணமாக கடந்த சில நாட்களாக தக்காளி உள்ளிட்ட காய்கறிகளின் விலை ஏற்றத்தை கண்டுள்ளது. குறிப்பாக  தக்காளி ஒரு கிலோ ரூ.150 வரை விற்பனை செய்யப்பட்டது .ஒரு லிட்டர் பெட்ரோல், டீசல் விலையை காட்டிலும் கிலோ தக்காளி விலை அதிகரித்தது.Tomato rate increase

இதனையடுத்து, விலையை கட்டுள்ள கொண்டுவர தமிழக அரசு சார்பில் அமைச்சர்கள் தலைமையில் ஆலோசனை நடத்தப்பட்டது. பின் தமிழ்நாடு கூட்டுறவு பசுமை பண்ணை நுகர்வோர் கடைகளில் தக்காளி குறைந்த விலையில் வழங்கப்பட்டும் என அறிவிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் பசுமை பண்ணைகளில் தக்காளி ஒரு கிலோ ரூ.79 க்கு விற்பனை செய்யப்பட்டது. தமிழகம் முழுவதும் சுமார் 60 க்கும் மேற்பட்ட பசுமை பண்ணை மூலம் குறைந்த விலையில் தக்காளி உள்ளிட்ட காய்கறிகள் மக்களுக்கு வழங்கப்பட்டது. சென்னையில் மொத்தம் 40 கடைகள் மூலம் விற்பனையானது நடைபெற்றது.

இந்நிலையில் ''நகர்ப்புறம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள குறிப்பிட்ட ரேஷன் கடைகளில் காய்கறி, தக்காளி விற்கப்படும் எனத் தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக கூட்டுறவு துறை அமைச்சர் ஐ.பெரியசாமி அறிக்கை வெளியிட்டுள்ளார். மேலும் அதில் தக்காளி கிலோவிற்கு ரூ.79 க்கும், வெண்டைக்காய் ரூ.70 க்கும், உருளைக்கிழங்குரூ.38 க்கும், கத்தரிக்காய்ரூ.65 க்கும் விற்பனை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.மேலும் காய்கறிகளின் விலை பட்டியலும் வெளியிடப்படுள்ளது.Tomato rate increase

மேலும் சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், ''மழையால்தான் தக்காளி விலை அதிகரித்துள்ளது. மழை இல்லாத மாநிலங்களிலிருந்து தக்காளி கொண்டுவரப்பட்டு வருகிறது. இந்த தக்காளி விலை உயர்வு என்பது தாற்காலிகமானதுதான். 600 மெட்ரிக் டன் தக்காளி வரவைக்கப்பட்டுள்ளது. நடமாடும் காய்கறி கடைகள் மூலம் தக்காளி விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். முதற்கட்டமாக 10 உழவர் சந்தைகளைத் தொடங்குவதோடு அவை திறம்படச் செயல்பட நடவடிக்கை எடுக்கப்படும்'' எனத் தெரிவித்துள்ளார்.

Follow Us:
Download App:
  • android
  • ios