தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி இந்த ஆண்டு பரிசு தொகுப்பில் மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், மல்லித்தூள், கடுகு, சீரகம், நெய், மிளகு, புளி, கடலைப்பருப்பு, பாசிப்பருப்பு, உளுந்தம் பருப்பு, உப்பு, ரவை, கோதுமை மாவு, வெல்லம், அரிசி, முந்திரிப்பருப்பு, திராட்சை, ஏலக்காய் மற்றும் முழு கரும்பு உள்ளிட்ட 21 வகையான பொருட்கள் அடங்கிய தொகுப்பு வழங்கப்பட்டது. 

ரேஷன் கடைகளில் பொங்கல் பரிசு தொகுப்பு வாங்க, இன்றுடன் அவகாசம் நிறைவடைய உள்ள நிலையில் இதுவரை 4.32 லட்சம் கார்டுதாரர்கள் வாங்காமல் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி இந்த ஆண்டு பரிசு தொகுப்பில் மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், மல்லித்தூள், கடுகு, சீரகம், நெய், மிளகு, புளி, கடலைப்பருப்பு, பாசிப்பருப்பு, உளுந்தம் பருப்பு, உப்பு, ரவை, கோதுமை மாவு, வெல்லம், அரிசி, முந்திரிப்பருப்பு, திராட்சை, ஏலக்காய் மற்றும் முழு கரும்பு உள்ளிட்ட 21 வகையான பொருட்கள் அடங்கிய தொகுப்பு வழங்கப்பட்டது. இந்த பொங்கல் பரிசு தொகுப்பு தமிழகத்தில் உள்ள 2.15 கோடி அரிசி கார்டுதாரர்களுக்கு வழங்க உள்ளதாக அரசு அறிவித்துள்ளது.

அதன்படி ரேஷன் கடைகளின் மூலமாக அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் கடந்த 4ம் தேதியில் இருந்து வழங்கி வருகிறது. இதனை ஜனவரி 13ம் தேதிக்குள் வழங்க வேண்டும் என்று அரசு திட்டமிட்டிருந்தது. ஆனால் ரேஷன் கடைகளுக்கு பொருட்கள் அனுப்புவதில் கால தாமதம் ஏற்பட்டது. அத்துடன் நடைமுறையில் இருந்த கைரேகை பதிவு முறை மூலமாக முதியவர்களுக்கு கைரேகை பதிவு செய்வதில் சிரமம் ஏற்பட்டதால் கால தாமதம் ஏற்பட்டது. அதனால் இந்த மாதம் 31ம் தேதி வரை பொங்கல் தொகுப்பை வழங்க கால அவகாசம் வழங்கப்பட்டது. 

இந்நிலையில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் பணி இன்றுடன் நிறைவடைவதால் தீவிரமாக நடைபெற்று கொண்டிருக்கிறது. மேலும் தமிழகத்தில் இதுவரை 2.11 கோடி கார்டுதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டுள்ளது. இது, மொத்த கார்டுதாரர்களில் 97.99 சதவீதம். இன்னும் 4.32 லட்சம் பேர் வாங்காமல் உள்ளனர். இன்றுடன் கால அவகாசம் முடியும் நிலையில் ரேஷன் கார்டுதாரர்கள் கடைகளுக்கு சென்று பொருட்களை பெற்றுக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.