மக்களை அச்சுறுத்தி வரும் கொரோனா எண்ணிக்கை, தமிழ்நாட்டில் இன்று மட்டும் 688 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் சென்னையில் மட்டும் 552 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதனால் தற்போது கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 12,448 ஆக உயர்ந்துள்ளது. 

தமிழ்நாட்டில் இதுவரை 20 மாவட்டங்கள் கொரோனா பாதிப்பில்லாத மாவட்டங்கள் என்று உறுதி செய்யப்பட்டுள்ள போதிலும், நாளுக்கு தான் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே செல்வது மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலேயும் இன்றைய தகவலின் படி, தமிழகத்தில் மேலும் 3 பேர் கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்துள்ளனர். எனவே தற்போது இறந்தவர்கள் எண்ணிக்கை 84 ஆக உயர்ந்துள்ளது. அதே நேரத்தில் சென்னையில் இன்று ஒரே நாளில் மட்டும் 552 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. 

எனவே தமிழகத்தில் மற்ற மாவட்டங்களை விட சென்னையில் தான் மக்களை அதிகம் தாக்கி வருகிறது கொரோனா.

மேலேயும் இதுவரை தமிழகத்தில் 4,895  கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.