டி.என்.பி.எஸ்.சி தலைவர் பாலச்சந்திரன் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று  வருகின்றனர்.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதுவரை அரசு தரப்பில் பல்வேறு நடவடிக்கை எடுக்கப்பட்டு வந்தாலும் மக்கள் மத்தியில் போதிய ஒத்துழைப்பு இல்லாததால் பாதிப்பு அதிகரித்து வருகிறது. குறிப்பாக கொரோனாவுக்கு எதிரான போரில் ஈடுபட்டு வரும் மருத்துவர்கள், செவிலியர்கள், எம்எல்ஏக்கள், அமைச்சர்கள் மற்றும் சில எம்.பி.க்களும் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். இதுவரை மொத்தம் 35க்கும் மேற்பட்ட எம்எல்ஏக்கள் கொரோனா பாதிக்கப்பட்டு குணமடைந்துள்ளனர். தமிழகத்தில் இதுவரை 5,08,511 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 8,434 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில், டி.என்.பி.எஸ்.சி தலைவர் பாலசந்திரனுக்கு கடந்த சில நாட்களாக சளி மற்றும் பல்வேறு தொந்தரவுகள் இருந்ததையடுத்து கொரோனா பரிசோதனை மேற்கொண்டார். அதில், அவருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. மேலும், பாலசந்திரனின் மனைவி மற்றும் மகளுக்கும் கொரோனா இருப்பது உறுதியாகியுள்ள நிலையில் இவர்கள்  பேரும் சென்னையில் உள்ள கிங் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.