அண்மையில் வெளியான குரூப் 4 தேர்வு முடிவுகளில் முறைகேடுகள் நடந்திருப்பதாக புகார் எழுந்தன. ராமேஸ்வரம் மற்றும் கீழக்கரை தேர்வு மையங்களில் தேர்வு எழுதியவர்களில் சிலர் இடைத்தரகர்கள் உதவியுடன் மறையக்கூடிய மையினால் தேர்வு எழுதியது விசாரணையில் தெரிய வந்தது. முறைகேட்டில் ஈடுபட்ட 39 தேர்வாளர்கள் முதல் 100 இடங்களுக்குள் வந்துள்ளனர்.

இதையடுத்து 99 தேர்வாளர்களை தகுதி நீக்கம் செய்த தேர்வாணையம் அவர்களை வாழ்நாள் முழுவதும் தேர்வு எழுதவும் தடை விதித்து அதிரடி உத்தரவு பிறப்பித்தது. ஏற்கனவே தேர்வான 39 பேர்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டதை அடுத்து புதியதாக 39 பேர் தேர்வு செய்யப்பட்டு அவர்கள் சான்றிதழ் சரிபார்ப்பிற்கு அழைக்கப்பட்டுள்ளனர். இதனிடையே தேர்வாளர்கள் முறைகேட்டில் ஈடுபட்டதற்கு உடந்தையாக இருந்த அதிகாரிகள், இடைத்தரகர்கள் ஆகியோர் கைது செய்யப்பட்டு வருகின்றனர். 

இந்தநிலையில் டி.என்.பி.எஸ்.சி முறைகேட்டில் ஈடுபட்ட முக்கிய குற்றவாளி இடைத்தரகர் ஜெயக்குமார் தற்போது சரணடைந்துள்ளார்.சிபிசிஐடி போலீசார் அவரை பலநாட்களாக தேடி வந்த நிலையில் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஜெயக்குமார் சரணடைந்திருக்கிறார். குரூப் 4 மற்றும் குரூப் 2 ஏ தேர்வுகளில் முறைகேட்டில் ஈடுபட்டதாக அவர் மீது புகார் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஜெயக்குமார் வீட்டில் இருந்து லேப்டாப், பென் டிரைவ் 60 பேனாக்கள் ஆகியவையும் கைப்பற்றப்பட்டுள்ளன. ஜெயக்குமார் பற்றி தகவல் அளிப்பவர்களுக்கு சன்மானம் வழங்கப்படும் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

'வாடா.. செருப்பை கழட்டுடா..! சிறுவனை அழைத்து தனது காலனியை கழட்ட சொன்ன அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்...