அக்டோபர் இறுதிக்குள் அனைவருக்கும் கிடைத்துவிடும்….. தமிழ்நாடு அரசின் அதிரடி திட்டம்…..

தமிழ்நாட்டில் 18 வயதுக்கும் மேற்பட்ட அனைவருக்கும் அக்டோபர் இறுதிக்குள் கொரோனா தடுப்பூசி செலுத்தி முடிக்க மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சகம் திட்டமிட்டுள்ளது.

TN govt plan fully vaccination within october

இரண்டாவது அலையில் இந்தியாவை உருக்குலைத்த கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்த தடுப்பூசியே பேராயுதமாக பார்க்கப்படுகிறது. மூன்றாவது அலை ஏற்படுவதை தடுக்க துரிதகதியில் தடுபூசி செலுத்தி முடிக்க மாநில, யூனியன் பிரதேச அரசுகளை மத்திய அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. கேரளாவில் கொரோனாவின் தாக்கம் கூடுதலாக இருப்பதால் தமிழ்நாட்டில் தடுப்பூசி செலுத்தும் பணி விரைவுபடுட்தப்பட்டுள்ளது.

 

TN govt plan fully vaccination within october

 

தமிழ்நாடு முழுவதும் கடந்த ஞாயிறன்று நடத்தப்பட்ட மெகா தடுப்பூசி முகாம்கள் மூலம் 28 லட்சத்து 91 ஆயிரம் டோஸ் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டன. பொதுமக்களிடம் ஆர்வம் கூடியிருப்பதால் தமிழ்நாட்டில் இரண்டாவது வாரமாக மெகா தடுப்பூசி முகாம் இன்று நடைபெற்று வருகிறது. சென்னையில் ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் தடுப்பூசி முகாமை மக்கள் நல்வாழ்வு துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது.

 

TN govt plan fully vaccination within october

தமிநாட்டில் 16 லட்சத்து 37 ஆயிரம் தடுப்பூசிகள் கையிறுப்பில் உள்ளன. இரண்டாவது மெகா தடுப்பூசி முகாம் மூலம் 15 லட்சம் தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. செப்டம்பர் மாதத்தின் முதல் 18 நாட்களில் 92 லட்சம் டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளன. மெகா தடுப்பூசி முகாம்களில் ஏற்கனவே இரண்டாவது தவனை செலுத்த தவறியவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது. கேரளா, ஆந்திராவில் தொற்றுக் கூடிக்கொண்டே செல்லும் நிலையில் தமிழ்நாட்டில் கொரோனா பரவல் சதவீதம் 1.1 ஆக உள்ளது.

அனைத்து மாவட்டங்களிலும் மக்கள் ஆர்வமுடன் தடுப்பூசி செலுத்தி வருகின்றனர். சென்னையில் 34 சதவீதம் பேர் இரண்டாவது தவனை தடுப்பூசி செலுத்திக்கொண்டுள்ளனர். மிக விரைவில் 4 கோடி தடுப்பூசி இலக்கை தொட வாய்ப்பு உள்ளது. அக்டோபர் மாத இறுதிக்குள் தமிழ்நாட்டில் அனைவருக்கும் முதல் டோஸ் தடுப்பூசியை செலுத்தி முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.  

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios