Asianet News TamilAsianet News Tamil

புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு தடைவிதிக்க அஞ்சும் தமிழ்நாடு அரசு! ஓட்டல்களுக்கு கோரிக்கை விடுத்த அமைச்சர் மா.சு!

நட்சத்திர விடுதிகளில் புத்தாண்டு கொண்டாட்டங்கள் நடைபெற்றா தமிழ்நாடு அரசு அதனை கண்காணிக்கும் என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்.

TN govt fears to ban new year celebration - minister ma subramaniyan request to hotel not arrange any events
Author
Chennai, First Published Dec 28, 2021, 11:52 AM IST

நட்சத்திர விடுதிகளில் புத்தாண்டு கொண்டாட்டங்கள் நடைபெற்றா தமிழ்நாடு அரசு அதனை கண்காணிக்கும் என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்.

உருமாறிய ஒமைக்ரான் வகை கொரோனா இந்தியாவில் வேகமாக பரவி வருகிறது. பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை ஒவ்வொரு நாளும் அதிகரித்து வருவதால் மத்திய அரசு பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. தொற்று பரவல் அதிகரிக்கும் பகுதிகளில் கட்டுப்பாடுகளை அதிகரிக்க மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகளுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் தொடர்ந்து அறிவுறுத்தல்களை வழங்கி வருகிறது. தொற்று பரவலை கட்டுப்படுத்த தேவைப்பட்டால் இரவு நேர ஊரடங்கை பிறப்பிக்கவும் மாநில அரசுகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

TN govt fears to ban new year celebration - minister ma subramaniyan request to hotel not arrange any events

இருதினங்களுக்கு முன்னர் நடைபெற்ற கிறிஸ்துமஸ் விழாவிற்கும் பல்வேறு மாநிலங்கள் கடுமையான கட்டுப்பாடுகளை விதித்தன. இந்தநிலையில் எதிர்வரும் புத்தாண்டை கொண்டாட மக்கள் ஒரே நேரத்தில் அதிகளவில் கூடுவார்கள் என்பதால் ஒமைக்ரான் பரவல் வேகம் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது. இதன் காரணமாக பல்வேறு மாநிலங்களில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. டெல்லி, மகாராஷ்டிரா, கர்நாடகா, கேரளா உள்ளிட்ட மாநில அரசுகள் இரவு நேர ஊரடங்கை அறிவித்து, செயல்படுத்தியும் வருகின்றன. தமிழ்நாட்டிலும் ஒமைக்ரான் பரல்வ அதிகரித்து வருவாதால் இரவு நேர ஊரடங்கை அமல்படுத்துவதோடு புத்தாண்டு கொண்டாட்டத்திற்கும் தடைவிதிக்க வேண்டும் என்று மருத்துவ நிபுணர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

TN govt fears to ban new year celebration - minister ma subramaniyan request to hotel not arrange any events

இந்தநிலையில், சென்னை எழும்பூர் கண் மருத்துவமனையில், நடைபெற்ற மாவட்ட பல்நோக்கு நடமாடும் கண் மருத்துவ வாகனங்களை தொடங்கிவைக்கும் நிகழ்ச்சியில் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கலந்துகொண்டார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழ்நாட்டில் ஒமைக்ரான் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருவதாகக் கூறினார். தொடர்ந்து பேசிய அவர், ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் பெரும்பாலும் குணமடைந்து வீடு திரும்பிவிட்டதாகக் கூறினார். ஒமைக்ரான் முடிவுகளுக்காக காத்திருப்பவர்களின் உடல்நிலையும் சீராக இருப்பதாக அவர் தெரிவித்தார்.

அப்போது, தமிழ்நாட்டில் இரவு நேர ஊரடங்கு மற்றும் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தடைவிதிக்கப்படுமா என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அமைச்சர் புத்தாண்டு கொண்டாட்டங்களில் ஈடுபடுவதை மக்கள் தவிர்க்க வேண்டும். நட்சத்திர விடுதிகளும் இதுபோன்ற ஏற்பாடுகளை செய்யாமல் இருக்க வேண்டும். இதுவரை எந்த நட்சத்திர விடுதியும் புத்தாண்டு கொண்டாட்டம் குறித்து அறிவிக்கவில்லை. அது மகிழ்ச்சி அளிக்கிறது. வேண்டுகோளையும் மீறி நட்சத்திர விடுதிகளில் புத்தாண்டு கொண்டாட்டங்கள் நடைபெற்றா தமிழ்நாடு அரசு அதனை கண்காணிக்கும் என்று கூறினார். இதன்மூலம் தமிழ்நாட்டில் புத்தாண்டு கொண்ட்டாட்டங்களுக்கு தடை கிடையாது என்பது உறுதியாகி இருக்கிறது.

TN govt fears to ban new year celebration - minister ma subramaniyan request to hotel not arrange any events

மேலும், பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், சென்னையில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால், மக்கள், முகககவசம் அணிவதை 100 சதவீதம் உறுதி செய்ய வேண்டும். அனைத்து இடங்களிலும் வீட்டை விட்டு வெளியே வந்தால் 100% முக கவசம் அணிந்து மற்ற ஊர்களுக்கு சென்னை மக்கள் முன்னோடியாக இருக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார். தமிழ்நாட்டில் மேலும் 118 பேருக்கு ஒமைக்ரான் அறிகுறி கண்டறியப்பட்டுள்ளது. அவர்களது ஆய்வு முடிவுகள் வந்த பின்னரே ஒட்டுமொத்த பாதிப்பு எண்ணிக்கை குறித்து தெரியவரும் என்றும் அமைச்சர் தெரிவித்தூள்ளார்.

Follow Us:
Download App:
  • android
  • ios