டிக் டாக் செயலியை தடை செய்வதற்கு தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வரும் நிலையில் 13 வயதுக்கு உட்பட்டவர்களுக்காக புதிய செயலியை உருவாக்க உள்ளது.

டிக்-டாக் செயலி இளைஞர்களிடம் வேகமாக பரவி வருகிறது. இந்த செயலியை பயன்படுத்தி சிலர் ஆபாசமான வீடியோக்களை பதிவிடுவதாக புகார் எழுந்தது. இதனால் இந்த டிக்டாக் செயலியை தடை செய்வதற்கு தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

இந்நிலையில் இந்நிலையில் டிக்டாக் செயலி புதிய சர்ச்சையில் சிக்கியுள்ளது. அமெரிக்காவில் உள்ள குழுந்தைகளின் ரகசிய தவல்களை அவர்களின் பெற்றோர்களின் அனுமதியின்றி பெற்றதாக டிக்டாக் செயலி மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அமெரிக்காவில் 13 வயதுகுட்பட்ட சிறுவர்களிடம் அவர்களின் தனிப்பட்ட விவரத்தை சேகரிக்கும் போது அவரவர்களின் பெற்றோர்களின் அனுமதியையும் வாங்க வேண்டும்.

ஆனால், இந்த விதிமுறைகளை டிக்டாக் செயலி கடைபிடிக்கவில்லை என்றும் விதியை மீறி குழந்தைகளின் தகவல்களை திரட்டியதாகவும் கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து அமெரிக்காவின் தலைமை வர்த்தக ஆணையம் டிக்டாக் செயலிக்கு இந்திய மதிப்பில் சுமார் 40கோடி ரூபையை அபராதமாக விதித்துள்ளது. இதனையடுத்து டிக்டாக் நிறுவனம் சார்பில் வெளியாகி உள்ள அறிக்கையில், ’13வயதுக்கு உட்பட்டவர்களுக்காக பெற்றோர்களால் கட்டுப்படுத்தும் வசதியோடு புதிய செயலி உருவாக்கப்படும்’’ என்று அறிவித்துள்ளது.