நடவடிக்கையாகவும்,  மதுவில்,  தனியார் கொள்ளையைத் தடுக்கும் நோக்கிலும் தமிழகத்தில் திரும்பிய பக்கமெல்லாம் டாஸ்மாக் கடைகளை திறந்து தமிழக அரசே  மதுவை விற்பனை செய்து வருகிறது.  இந்நிலையில் டாஸ்மாக்குக்கு எதிராக  மக்கள் போராடுவரும் நிலையில், டாஸ்மாக் கடைகள் படிப்படியாக குறைக்கப்படும் என கூறி அரசு ஒரு சில கடைகளை மூடியுள்ளது. 

ஆனாலும், ஒவ்வொரு பண்டிகையின் போதும் டாஸ்மாக் விற்பனைக்கு டார்கெட் வைத்து ,  அரசு மதுவில் லாபம் ஈட்டி வருகிறது. நடந்து முடிந்த  தீபாவளி பண்டிகைக்கு அரசு இலக்கு நிர்ணயித்ததில் மதுபானங்களின் விற்பனை சுமார் 455 கோடி ரூபாயை எட்டியுள்ளது. அதாவது 27 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட்ட நிலையில் அதற்கு முந்தைய இரண்டு தினங்களுக்கு இலக்கு நிர்ணயித்ததில் கடந்த ஆண்டைவிட அதிக லாபம் ஈட்டப்பட்டுள்ளது.

அதில் 25-10- 2019 அன்று ,  ஒரே நாளில் 100 கோடி ரூபாய் அளவுக்கு மது விற்பனையாகி உள்ளது.  அதற்கு மறுநாளான  சனிக்கிழமையன்று  26-10-2019 அன்று 183 கோடி ரூபாய் அளவிற்கு மதுபானங்கள் விற்பனையாகியுள்ளன.  தீபாவளி பண்டிகை அன்று அதாவது ஞாயிற்றுக்கிழமை 27-10-2019 அன்று சுமார் 172 கோடி ரூபாய் அளவுக்கு மதுபானங்கள் விற்பனையாகி உள்ளது. ஆக மொத்தம் இந்த மூன்று நாட்களில் மட்டும் சுமார்  455 கோடி ரூபாய்க்கு மதுபானங்கள் விற்பனையாகி உள்ளன.  கடந்த ஆண்டு தீபாவளி பண்டிகைக்கு சுமார் 325 கோடி ரூபாய் விற்பனையாகியிருந்த  நிலையில், இந்த ஆண்டு 130 கோடி ரூபாய்க்கு கூடுதலாக விற்பனை செய்து  455 கோடியை எட்டியுள்ளது, இது தமிழக டாஸ்மார்க் விற்பனையில் சாதனையாகக் கருதப்படுகிறது.